முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Puthandu 2023 : தமிழ் புத்தாண்டு படையலுக்கு வாழைக்காய் வறுவல் ரெசிபி..

Puthandu 2023 : தமிழ் புத்தாண்டு படையலுக்கு வாழைக்காய் வறுவல் ரெசிபி..

வாழைக்காய் வறுவல்

வாழைக்காய் வறுவல்

நமது இந்திய சமையல் அறையில் அதிகளவில் புழக்கத்தில் உள்ள காய்கறிகளில் ஒன்று தான் வாழைக்காய். இதை வைத்து வறுவல், கூட்டு, அவியல், பொரியல் என பலவகையான ரெசிபிகள் செய்யலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு மரத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் எண்ணில்லா மருத்துவக்குணங்கள் உள்ளது என்றால் அது முக்கனிகளுள் ஒன்றான வாழை தான். வாழையின் இலை முதல் பழம் வரை அனைத்தும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை நமது உடலை பாக்டீரியாவிலிருந்து பாதுகாத்து உடலில் இருந்து தேவையற்ற நச்சுக்களையும் நீக்குகிறது. குறிப்பாக நமது இந்திய சமையல் அறையில் அதிகளவில் புழக்கத்தில் உள்ள காய்கறிகளில் ஒன்று தான் வாழைக்காய்.

இதை வைத்து வறுவல், கூட்டு, அவியல், பொரியல் என பலவகையான ரெசிபிகள் செய்யலாம். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச்சாப்பிடும் ரெசிபிகளில் ஒன்றான வாழைக்காய் வறுவல் எப்படி செய்யலாம்? இதோ இன்றைக்கு இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

வாழைக்காய் வறுவல் செய்முறை:

தேவையான பொருள்கள்:

  • வாழைக்காய் – 2
  • கடுகு – 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • மல்லித்தூள் – 2 ஸ்பூன்
  • மிளகு தூள் – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் வாழைக்காயின் தோலை நன்றாக சீவி விட வேண்டும். பின்னர் ஒரு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இதை தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  • இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், மிளகாய் வத்தல், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். இதனுடன் தண்ணீரில் போட்டு வைத்த வாழைக்காயை வடிகட்டி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பின்னர் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். சிறிது தண்ணீர் தெளித்து வாழைக்காயை வேக வைக்கவும்.
  • அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வாழைக்காயை நன்கு ப்ரை ஆகும் வரை வறுக்க வேண்டும். வாழைக்காய் பொன்னிறமாக வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பரிமாறலாம்.
  • இந்த ரெசிபியில் காரம் அதிகளவில் இல்லை என்பதால் நிச்சயம் குழந்தைகள் விரும்பிச்சாப்பிடுவார்கள். இதை தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு சைடு டிஸ்ஸாக வைத்து நீங்கள் சாப்பிடலாம். நிச்சயம் டேஸ்ட் வேற லெவலா இருக்கும். அதிலும் தற்போது கோடை விடுமுறை வந்துவிட்டதால், ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கும் உங்களது குழந்தைகளுக்கு நீங்கள் செய்துக்கொடுக்கலாம்..
  • Also Read | Puthandu 2023: தமிழ் புத்தாண்டுக்கு ஸ்பெஷலாக அரிசி - பருப்பு பாயாசம் செய்யுங்கள்.. ரெசிபி உள்ளே...

top videos

    குறிப்பு: மேலும் நீங்கள் செய்யும் வாழைக்காய் வறுவல் உங்களுக்கு கூடுதல் சுவையுடன் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தாளிக்கும் போது வெங்காயம் மற்றும் இஞ்சி , பூண்டு விழுது சேர்த்து வதக்கி விட்டு வாழைக்காய் வறுவல் நீங்கள் செய்யலாம். இதில் காரம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கொஞ்சம் கூடுதலாக மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    First published:

    Tags: Recipe, Tamil New Year