முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / puthandu 2023 : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் அசத்தல் சுவையில் சாம்பார் வைப்பதற்கான ரெசிபி.!

puthandu 2023 : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் அசத்தல் சுவையில் சாம்பார் வைப்பதற்கான ரெசிபி.!

சாம்பார்

சாம்பார்

பல காய்களை போட்டு வைக்கப்படும் சுவைமிகுந்த சாம்பார் புத்தாண்டு விருந்தை மேலும் ஸ்பெஷலாக்குகிறது. சரி, இப்போது உங்களது தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஸ்பெஷலாக மாற்றும் சுவையான சாம்பார் ரெசிபி.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்த ஆண்டு (2023) ஏப்ரல் 14 வெள்ளிக்கிழமையன்று தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்தாடை எடுப்பது, படையலுக்கு தேவையான பூ, பழங்கள் மற்றும் விருந்துக்கு தேவையான காய்கறிகள் வாங்குவது என பலரும் பிசியாக இருக்கிறார்கள்.

நம்முடைய தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை சிறப்பாக்குவதில் அறுசுவை விருந்துக்கு முக்கிய பங்கு உண்டு. கூட்டு, பொரியல், ரசம், வடை, பாயசம் உள்ளிட்ட பதார்த்தங்கள் செய்யப்படுவது வழக்கம். நம்முடைய தென்னிந்திய உணவு வகைகளில் சாம்பாருக்கு எப்போதுமே முக்கிய பங்கு உண்டு என்றாலும் பல காய்களை போட்டு வைக்கப்படும் சுவைமிகுந்த சாம்பார் புத்தாண்டு விருந்தை மேலும் ஸ்பெஷலாக்குகிறது. சரி, இப்போது உங்களது தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஸ்பெஷலாக மாற்றும் சுவையான சாம்பார் ரெசிபியை இங்கே பார்க்கலாம்.

டேஸ்ட்டியான சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் - 1 (தோலுரித்து நறுக்கியது)
  • தக்காளி - 2 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 2
  • கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
  • கேரட் - 2 (நறுக்கியது)
  • பீன்ஸ் - 6 (நறுக்கியது)
  • தோல் நீக்கி நறுக்கிய வெள்ளரி - 1 கப்
  • வெண்டை - 4 (நறுக்கியது)
  • உருளைக்கிழங்கு - 1 (தோல் நீக்கி நறுக்கியது)
  • தோல் நீக்கி நறுக்கிய மாங்காய் - 1 கப்
  • சிறிய வாழைக்காய் - 1 தோல் நீக்கி நறுக்கியது
  • வேக வைத்த துவரம் பருப்பு - 1 கப்
  • சாம்பார் பொடி - 3 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
  • உப்பு & தண்ணீர் - தேவைக்கேற்ப
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு சிறிய கைப்பிடியளவு

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து

top videos

    தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் சாம்பார் செய்முறை:

    முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் எடுத்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து சுமார் 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
    பின் ஒன்றன்பின் ஒன்றாக கத்திரிக்காய், கேரட், பீன்ஸ், வெண்டை, உருளை, வாழைக்காய் என எடுத்து வைத்திருக்கும் எல்லா காய்களையும் அடுப்பில் இருக்கும் சாம்பார் பாத்திரத்தில் சேர்த்து 8 - 10 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காய்கறிகள் வேக10 முதல் 15 நிமிடங்கள் மூடி போட்டு மூடி வைக்கவும். காய்கள் நன்கு வெந்த பின் வேகவைத்த பருப்பு, சாம்பார் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலக்கி சுமார் 10 - 15 நிமிடங்கள் வரை மீண்டும் வேக வைக்கவும்.
    இதற்கிடையே தேங்காய் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, என அனைத்து மசாலாப் பொருட்களையும் போட்டு சுமார் 1 நிமிடம் வறுக்கவும். பின் இதை சாம்பாரில் ஊற்றி நன்கு கலக்கவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவவும்.
    First published:

    Tags: Sambar Recipe, Sambar Recipe in Tamil, Tamil New Year