முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Puthandu 2023 : தமிழ் புத்தாண்டுக்கு சுவையான சேமியா பாயசம் செய்ய ரெசிபி..!

Puthandu 2023 : தமிழ் புத்தாண்டுக்கு சுவையான சேமியா பாயசம் செய்ய ரெசிபி..!

சேமியா பாயாசம்

சேமியா பாயாசம்

இந்த ரெசிபிக்கு வறுத்த சேமியாவை பயன்படுத்த வேண்டும். வறுத்த சேமியா கிடைக்காவிட்டால் சேமியாவை வாங்கி கடாயில் போட்டு வறுத்து எடுத்து கொள்ளலாம்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

மாநிலம் முழுவதும் இந்த ஆண்டு (2023) ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டை கோலாகலமாக வரவேற்க நம் மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.

இந்த சிறப்பு நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, புது உடை அணிந்து கோயிலுக்கு சென்று மக்கள் வழிபடுவது வழக்கம். கூடவே வீட்டில் பல வகை ஸ்பெஷல் சமையல் செய்து சாமிக்கு படைத்து விட்டு, குடும்பத்தோடு உண்டு மகிழ்வோம். உங்களது தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை மேலும் ஸ்பெஷலாக்கும் வகையில் பல பாரம்பரிய ரெசிபிக்கள் உள்ளன. இந்த லிஸ்ட்டில் கூட்டு, சாம்பார், காய்கறிகளை கொண்டு செய்யப்படும் பொரியல், வடை, அப்பளம் என பல வெரைட்டிகள் உண்டு. அந்த வகையில் இந்த லிஸ்ட்டில் முக்கியமான இனிப்பு ரெசிப்பி பாயசம்.

தமிழ் புத்தாண்டு விருந்து சமையலில் பெரும்பாலானோர் வீட்டில் பாயசம் கட்டாயம் இடம்பெறும். சரி இப்போது மிக எளிதாக செய்ய கூடிய சேமியா பாயசத்திற்கான ரெசிபி பற்றி பார்க்கலாம். இந்த ரெசிபிக்கு வறுத்த சேமியாவை பயன்படுத்த வேண்டும். வறுத்த சேமியா கிடைக்காவிட்டால் சேமியாவை வாங்கி கடாயில் போட்டு வறுத்து எடுத்து கொள்ளலாம்.

சேமியா பாயசம் செய்ய தேவையான பொருட்கள்:

 • பால் - 500 மில்லி
 • வறுத்த சேமியா (வெர்மிசெல்லி) - 1/2 கப்
 • தண்ணீர் - 1 கப்
 • சர்க்கரை - 1/2 கப்
 • பாதியாக நறுக்கிய முந்திரி - 3 டேபிள் ஸ்பூன்
 • சுல்தானா திராட்சைகள் - 3 டேபிள் ஸ்பூன்
 • ஏலக்காய் பவுடர் - 1/4 டீஸ்பூன்
 • குங்குமப்பூ இழைகள் - 2
 • நெய் - 1 டேபிள் ஸ்பூன்

top videos

  சுவையான சேமியா பாயசம் செய்வதற்கான ரெசிபி :

  சேமியா பாயசம் செய்ய முதலில் தண்ணீரில் சேமியாவை வேக வைத்து கொள்ள வேண்டும். இதற்கு ஒரு பாத்திரத்தில் சேமியாவை (Vermicelli) கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். சேமியா கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சேமியாவை சாஃப்டாக குக் செய்யவும்.
  சேமியா நன்கு வெந்ததும் எடுத்து வைத்துள்ள 500 மில்லி பாலை பாத்திரத்தில் ஊற்றவும். பிறகு இதோடு சர்க்கரை, ஏலக்காய் பவுடர் மற்றும் குங்குமப்பூ சேர்த்து கொள்ளவும். இந்த மிக்ஸிங்கில் சேர்த்த சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை நன்கு கிளறவும்.
  ஃப்ளேவர் நன்கு மிக்ஸ் ஆகும் வரை பாத்திரத்தில் இருக்கும் சேமியா பாயசத்தை மேலும் சுமார் 5 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்கவும். பாயசம் கெட்டியாக மற்றும் க்ரீமியாக மாறும்.
  எனினும் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பாயசத்தின் கன்சிஸ்டென்சியை நீங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். பாயசம் சூடு ஆறியவுடன் சேமியா அனைத்து பாலையும் உறிஞ்சி கெட்டியாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  சேமியா அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் போதே ஒரு சிறிய கடாயில் குறைந்த வெப்பத்தில் நெய் சேர்த்து சூடாக்கி எடுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து பொன்னிறமாகவும் வறுக்கவும். கூடவே திராட்சையும் சேர்த்து சில நொடிகள் நெய்யில் கிளறி எடுத்து கொள்ளளவும்.
  பின் சேமியா பாயசம் இருக்கும் அடுப்பை அணைத்து விட்டு அடுப்பை நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்க்கவும். உங்களது விருப்பத்திற்கேற்ப பாயசத்தை சூடாக அல்லது குளிர்ச்சியாக பரிமாறலாம்.
  First published:

  Tags: Payasam, Sweet recipes, Tamil New Year