முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Puthandu 2023 : மெது வடை இல்லாமல் புத்தாண்டா..? புஸ் புஸ்னு உப்பி வர அசத்தல் டிப்ஸ்..

Puthandu 2023 : மெது வடை இல்லாமல் புத்தாண்டா..? புஸ் புஸ்னு உப்பி வர அசத்தல் டிப்ஸ்..

வடை

வடை

உளுந்தம் பருப்பில் புரதச்சத்து நிரம்பியிருக்கும் என்பதில் ஐயமில்லை. புத்தாண்டை கொண்டாட பேக்கரியில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும், நம் வீட்டில், நாமே சத்தான மெதுவடையை தயாரித்து சாப்பிடலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் புத்தாண்டு தினத்தில் அதிகாலைப் பொழுதில் எழுந்து கோவில் மற்றும் இதர வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வோம். இதற்கு அடுத்தபடியாக என்ன தோன்றும். காலை டிபன் மற்றும் மதிய உணவுகள் சிறப்புமிக்க விருந்தாக அமைய வேண்டும் என்று விரும்புவோம். காலை உணவாக இருந்தாலும் சரி, மதிய உணவாக இருந்தாலும் சரி அதற்கு அழகும், சுவையும் ஊட்டக் கூடியது மெதுவடை என்று சொல்லக் கூடிய உளுந்து வடை ஆகும்.

உளுந்தம் பருப்பில் புரதச்சத்து நிரம்பியிருக்கும் என்பதில் ஐயமில்லை. புத்தாண்டை கொண்டாட பேக்கரியில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும், நம் வீட்டில், நாமே சத்தான மெதுவடையை தயாரித்து சாப்பிடலாம். கண்டிப்பாக புத்தாண்டு தினத்தில் வீட்டில் உள்ள எல்லோருக்குமே இது மன நிறைவை தரும்.

தேவையான பொருட்கள் : 

ஒரு கப் உளுந்தம் பருப்பு, சின்ன வெங்காயம் 10 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி சிறு துண்டு பொடிப்பொடியாக நறுக்கியது, மிளகு - 5, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு மற்றும் எண்ணெய் 300 மில்லி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். வடை மென்மையாக வருவதற்கு இந்தப் பொருட்களே போதுமானது. கொஞ்சம் மொறு, மொறுவென இருக்க வேண்டும் என்று விரும்பினால் சிறிதளவு ரவை எடுத்துக் கொள்ளலாம்.

செய்முறை : 

  • உளுந்தை குறைந்தபட்சம் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் கிரைண்டர் அல்லது மிக்ஸி மூலமாக அரைத்துக் கொள்ள வேண்டும். மாவு அரைக்கும்போது அதிகம் தண்ணீர் விடக் கூடாது.
  • கிரைண்டரில் பிடிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க லேசாக தண்ணீர் தெளித்து விட்டால் போதுமானது. இப்போது கொள, கொளவென்ற வெள்ளை நிற மாவு தயாராக இருக்கும்.
  • இப்போது நறுக்கி வைத்த மிளகாய், வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும். அதேபோல உப்பு, கறிவேப்பிலை, மிளகு ஆகியவற்றையும் மாவுடன் சேர்த்து கலக்கவும்.
  • பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
  • அரைத்த மாவை சிறு, சிறு உருண்டைகளாக பிடித்து, தட்டையாக தட்டி, நடுவே துளையிட்டு எண்ணெய் சட்டியில் போடவும்.
  • தீ மிதமான அளவில் இருக்க வேண்டும். வடை நன்றாக சிவந்து வரும் வரையில் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக வைக்கவும்.
  • Also Read | Puthandu 2023 : தமிழ் புத்தாண்டு தினத்தில் ’பானகம்’ இல்லாமலா..? இதோ ரெசிபி டிப்ஸ்..!

    கவனிக்க வேண்டியவை : 

    • நீங்கள் வடை சுடும்போது அதிக எண்ணெய் குடிக்கிறது என்றால், நீங்கள் மிகுதியாக தண்ணீர் சேர்த்துள்ளீர்கள் என்று அர்த்தம். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் அளவு கல் உப்பு போட்டால் வடை அதிகம் எண்ணெய் எடுத்துக் கொள்ளாது. ஆனால், அதற்கேற்ப மாவில் உப்பை குறைக்கவும்.
    • உளுந்தை அதிகபட்சமாக 3 மணி நேரத்திற்கு மேல் ஊற விடக் கூடாது. வேலைப்பளு காரணமாக தாமதம் ஆனால், ஊற வைத்த உளுந்தை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.
    • வடையை சூடாக எடுத்ததும் அதில் இட்லி சாம்பாரை ஊற்றி வைத்தால் சாம்பார் வடை தயார் ஆகிவிடும். அதேபோல மதிய வேளையில் ரசம் ஊற்றி வைத்து ரச வடையும், தயிர் வடையும் தயார் செய்து சுவைக்கலாம்.
top videos

    First published:

    Tags: Food recipes, Tamil New Year