முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Puthandu 2023: தமிழ் புத்தாண்டுக்கு ஸ்பெஷலாக அரிசி - பருப்பு பாயாசம் செய்யுங்கள்.. ரெசிபி உள்ளே...

Puthandu 2023: தமிழ் புத்தாண்டுக்கு ஸ்பெஷலாக அரிசி - பருப்பு பாயாசம் செய்யுங்கள்.. ரெசிபி உள்ளே...

அரிசி-பருப்பு பாயாசம்

அரிசி-பருப்பு பாயாசம்

பாயாசத்திலும் பல வகைகள் உண்டு. பொதுவாக ஜவ்வரிசி - சேமியா பாயாசம் செய்வதே பலரது வழக்கமாக இருக்கிறது. அதேபோல பாசிப்பருப்பு - பச்சரிசி பாயாசம் செய்தும் சாப்பிடலாம். பாசிப்பருப்பில் உள்ள புரதச் சத்தும், இதில் சேர்க்கப்படுகின்ற வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்தும் நம் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவு செய்வதாகவும் அமையும்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் புத்தாண்டு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல் நாளில் நம் வாழ்க்கை சிறப்பாக அமைய சிறப்பு வழிபாடுகளை செய்யும் அதே சமயத்தில், வீட்டில் இனிப்புகளுடன் இந்த நாளை கொண்டாடி தீர்ப்பது நிறைவாக அமையும். இனிப்பு என்ற பட்டியலில் எத்தனையோ வகை உண்டு என்றாலும், நம் பாரம்பரிய விருந்தில் தவறாமல் இடம்பெறும் பாயாசம் செய்வது தித்திப்பாக அமையும்.

பாயாசத்திலும் பல வகைகள் உண்டு. பொதுவாக ஜவ்வரிசி - சேமியா பாயாசம் செய்வதே பலரது வழக்கமாக இருக்கிறது. அதேபோல பாசிப்பருப்பு - பச்சரிசி பாயாசம் செய்தும் சாப்பிடலாம். பாசிப்பருப்பில் உள்ள புரதச் சத்தும், இதில் சேர்க்கப்படுகின்ற வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்தும் நம் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவு செய்வதாகவும் அமையும்.

தேவையான பொருட்கள் : 

பச்சரிசி 2 டேபிள் ஸ்பூன் அளவு, பாசிப்பருப்பு கால் கப் அளவு, நாட்டு சர்க்கரை அல்லது இடித்த வெல்லம் அரை கப் அளவு எடுத்துக் கொள்ளவும். அரை மூடி பெரிய தேங்காயை துருவியெடுத்து, அதில் இருந்து கால் கப் அளவு தேங்காய் பால் எடுத்து வைக்கவும். முந்திரி பருப்பு - 10, ஏலக்காய் - 3, உப்பு ஒரு சிட்டிகை அளவு, 4 டீ ஸ்பூன் நெய், தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.

top videos

    செய்முறை :

    பச்சரிசியை மிக்ஸியில் கொரகொரப்பாக அடித்துக் கொள்ளவும். நீங்கள் விரும்பும் பட்சத்தில் வெறும் கடாயை சூடேற்றி, அதில் பச்சரிசியை பொன்னிறமாக வறுத்து, ஆறிய பிறகு அரைத்துக் கொள்ளலாம். உங்கள் பாயாசத்தின் சுவை மற்றும் மனம் ஆகியவற்றை இது மேம்படுத்தும்.
    அரிசியை வறுத்த அதே கடாயில் இரண்டு டீ ஸ்பூன் அளவு நெய் விட்டு, அதில் பாசிப்பருப்பு சேர்த்து மனம் வருகின்ற வரை வறுக்கவும்.
    இப்போது குக்கரில் சுமார் 4 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து, அதில் பாசிப்பருப்பு, அரைத்த அரிசி, உப்பு ஆகியவற்றை சேர்த்து 2 அல்லது 3 விசில் வரை வேக விடவும். நீங்கள் நேரடியாக பாத்திரத்திலும் வேக வைக்கலாம்.
    வேக வைத்த கலவையில் வெல்லம் / நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்த நிலையில் இறக்கி விடவும்.
    இப்போது தேங்காய் பால், தட்டி வைத்த ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கலக்கி விடவும். மீண்டும் அடுப்பில் வைத்து லேசான தீயில் ஒரு நிமிடம் மட்டும் வைக்கவும். தேங்காய் பால் ஊற்றிய பிறகு அதிக சூடேற்றினாலோ அல்லது அதிக நேரம் கொதிக்க விட்டாலோ பாயாசத்தின் சுவை மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    இறுதியாக கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.
    வறுத்த பருப்பை பாயாசத்தில் சேர்த்து, பரிமாறவும். கமகமவென்ற மனமும், தித்திப்பான சுவையும் வீட்டில் உள்ள அனைவரின் மனதையும் கவரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
    First published:

    Tags: Payasam, Sweet recipes, Tamil New Year