முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Puthandu 2023 : தமிழ் புத்தாண்டு தினத்தில் ’பானகம்’ இல்லாமலா..? இதோ ரெசிபி டிப்ஸ்..!

Puthandu 2023 : தமிழ் புத்தாண்டு தினத்தில் ’பானகம்’ இல்லாமலா..? இதோ ரெசிபி டிப்ஸ்..!

பானகம்

பானகம்

ஏப்ரல் 14 ஆம் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டும், ராம நவமி திருநாளும்  கொண்டாடப்படும். இதனால் மக்கள் அதிகளவில் வெயில் சமயத்திலும் வெளியில் வரும் சூழல் ஏற்படும் என்பதால், இந்த நாள்களில் நம் உடலினைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு இந்த பண்டிகை தினத்தில் பானகம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடைக்காலம் வந்தாச்சு. பல பள்ளிகளில் குழந்தைகளுக்கும் லீவு விட்டாச்சு.. இதோடு தமிழ் புத்தாண்டு, கோவில் திருவிழாக்கள் முதல் தேர் திருவிழா என எங்கு பார்த்தாலும் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது. குறிப்பாக  வெள்ளிக்கிழமை அதாவது ஏப்ரல் 14 ஆம் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டும், ராம நவமி திருநாளும் கொண்டாடப்படும். இதனால் மக்கள் அதிகளவில் வெயில் சமயத்திலும் வெளியில் வரும் சூழல் ஏற்படும் என்பதால், இந்த நாள்களில் நம் உடலினைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு இந்த பண்டிகை தினத்தில் பானகம் செய்யப்படுகிறது.

இதோடு தேர் திருவிழாக்களின் போது ஒவ்வொரு தெருக்களிலும் இந்த பானம் பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. நிச்சயம் நம்மில் பலர் சிறு வயதில் நிச்சயம் இதை நாமும் பருகி இருப்போம். இதை நீங்கள் வீட்டில் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இதோ எப்படி செய்யலாம்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..

வீட்டிலேயே எளிமையாக பானகம் செய்முறை:

தேவையான பொருள்கள்:

  • வெல்லம் – அரை கப்
  • குளிர்ந்த தண்ணீர் – 2 கப்
  • எலுமிச்சை – 1
  • துளசி இலை – 5
  • உண்ணக்கூடிய பச்சை கற்பூரம் - சிறிதளவு
  • சுக்குப் பொடி – கால் டீஸ்பூன்
  • உப்பு – 1சிட்டிகை
  • ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
  • ஜாதிக்காய் பொடி – 1 சிட்டிகை

செய்முறை:

  • நீங்கள் பானகம் செய்வதற்கு முதலில் வெல்லத்தை பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்னர் குளிர்ந்த நீரில் பொடியாக்கி வைத்த வெல்லத்தை நன்கு கரைத்துக்கொள்ள வேண்டும். அதனுள் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொண்டு பின், அதில் சுக்குப் பொடி, ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்ந்து நன்றாக கலந்து விட்டு அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
  • இதையடுத்து வடித்து வைத்துள்ள தண்ணீரில் ஜாதிக்காய் தூள் மற்றும் துளசி இலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் ஏலக்காய் நீங்கள் சேர்க்கும் போது உங்களுக்கு கூடுதல் சுவையைக் கொடுக்கும். இந்த பானத்திற்கு வாசனை சேர்க்க வேண்டும் என்பதற்காக கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நீங்கள் இந்த பானத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • Also Read | Puthandu 2023 : தமிழ் புத்தாண்டுக்கு கண்டிப்பாக வைக்க வேண்டிய வேப்பம் பூ ரசம் ரெசிபி..!

    கோடைகால பானம்:

top videos

    இந்த பானகம் நீங்கள் கோவில் விழாக்களுக்கு மட்டுமில்லாது, கோடைக்காலத்தில் நமது தாகத்தைத் தணிக்கவும் இந்த பானம் பயன்படுகிறது. சுக்கு, ஏலக்காய், வெல்லம் போன்ற இயற்கை பொருள்கள் இதில் சேர்க்கப்படுவதால் உடலுக்கு மிகவும் சத்துள்ளதாக இருப்பதோடு,கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவியாக உள்ளது. எனவே இதுப்போன்று இந்த தமிழ் புத்தாண்டு மட்டுமில்லாது வெயிலைத் தணிக்க கோடைக்காலத்திலும் நீங்கள் இந்த பானங்களைச் செய்து பருகுங்கள். நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

    First published:

    Tags: Recipe, Tamil New Year