முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொளுத்தும் வெயிலுக்கு இதமான அன்னாசி மில்க் ஷேக் செய்வது எப்படி..?

கொளுத்தும் வெயிலுக்கு இதமான அன்னாசி மில்க் ஷேக் செய்வது எப்படி..?

குழந்தைகளுக்கு பிடித்த அன்னாசி மில்க் ஷேக் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பிடித்த அன்னாசி மில்க் ஷேக் செய்வது எப்படி?

அடிக்கும் வெயிலில் இருந்து உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மத்திய நேரங்களில் அன்னாசி மில்க் ஷேக் செய்து கொடுங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். எனவேதான், வீட்டில் இருப்பவர்கள் தண்ணீர் நிறையா குடி, பழங்கள் சாப்பிடு என கூறுகிறார்கள். 

கோடை காலத்தில், உடல நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். அந்தவகையில், அன்னாசி பழத்தை பயன்படுத்தி பைனாப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அன்னாசி பழம் - 1.

பால் - அரை கப்.

கிரீம் (வெண்ணிலா) - 1/4 கப்.

சர்க்கரை - 2 ஸ்பூன்.

வெண்ணிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்.

ஐஸ் துண்டுகள் - 1/2 கப்.

செய்முறை :

மில்க் ஷேக் செய்ய தேவையான அளவு, அன்னாசி பழத்தை எடுத்து தோலுரித்து சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது, அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தயார் செய்து கொள்ளவும்.

அதேநேரம், மில்க் ஷேக்குக்கு தேவையான மற்ற பொருட்களையும் எடுத்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும்.

பின்னர், ஒரு மிக்ஸ் ஜார் எடுத்து, அதில் அரை கப் பால் மற்றும் அன்னாசி பழ துண்டுகளை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பழத்தை அரைக்கும் போது தண்ணீர் சேர்க்காமல் இருப்பது நல்லது. இல்லையெனில், சுவை மாறுபடும்.

பின்னர், இதனுடன் ஒரு ½ தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் அல்லது 2 சிட்டிகை வெண்ணிலா தூள் சேர்க்கவும். இந்த வெண்ணிலா எசன்ஸ், மிக்ல் ஷேக்கின் சுவையை அதிகரிக்க உதவும்.

Also Read | அடிக்கிற வெயிலுக்கு இதமான ஜில் ஜில் ஜிகர்தண்டா செய்யலாமா..? மதுரை ஸ்பெஷல் ரெசிபி இதோ..

பானத்தின் சுவையை கூட்ட இதனுடன் 2 - 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லத்தைச் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் விரும்பினால், சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டும் சேர்க்கலாம்.

அன்னாசி பழ மில்க் ஷேக்கின் குளுமையை மேலும் அதிகரிக்க, ஐஸ் கட்டி துண்டுகளை இதனுடன் சேர்த்து ஒரு முறை அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஐஸ்கட்டிகள் பானத்தின் திரவ தன்மையை மேலும் அதிகரிக்கும்

இறுதியாக இந்த அன்னாசி மில்க் ஷேக்கில் சிறிது இலவங்கப்பட்டை அல்லது ஏலக்காய் பொடியை சேர்த்து அரைத்து, தனியே ஒரு குடுவையில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் மில்க் ஷேக் தயாராகிவிட்டது.

top videos

    குடுவையில் இருக்கும் அன்னாசி மில்க் ஷேக்கினை, ஒரு கோப்பையில் ஊற்றி அதன் மீது ஒரு கரண்டி கிரீம் வைத்து குளிர்ச்சியாக பரிமாற வேண்டியது தான். அழகுக்கு கோப்பையின் விளிம்பில் ஒரு அன்னாசி துண்டை செருகிக் கொள்ளுங்கள்.

    First published:

    Tags: Food recipes, Healthy juice, Pineapple, Summer tips