முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சுவையான மற்றும் காரசாரமான ஆலு கோபி.! வீட்டிலேயே ஈஸியாக செய்வதற்கான ரெசிபி

சுவையான மற்றும் காரசாரமான ஆலு கோபி.! வீட்டிலேயே ஈஸியாக செய்வதற்கான ரெசிபி

ஆலு கோபி மசாலா

ஆலு கோபி மசாலா

இந்த ஆலு கோபி ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு முறைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த டிஷ் பொதுவாக அரிசி மற்றும் பருப்புடன் சாலட் மற்றும் ரொட்டி/பராத்தாவுடன் சேர்த்து சாப்பிடப்படுகிறது. தவிர இந்த டிஷ்ஷில் ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்  மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சத்தான உணவாகவும் இருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பல பாரம்பரிய வடஇந்திய உணவுகள் தற்போது நாடு முழுவதும் பிரபலமாக உள்ளன மற்றும் அனைத்து தரப்பு மக்களாலும் மிகவும் விரும்பி சாப்பிடப்படுகின்றன. அந்த வகையில் பலருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருப்பது மிகவும் சுவையான ஆலு கோபி.

ஆலு கோபி (Aloo gobhi) என்பது உருளைக்கிழங்கு மற்றும் காலிஃபிளவரைக் கொண்டு தயாரிக்கப்படும் டிஷ் ஆகும். பொதுவாக இது சைடிஷ்ஷாக வழங்கப்படுகிறது. சில நேரங்களில் மெயின் டிஷ்ஷாகவும் பலரால் விரும்பி சாப்பிடப்படுகிறது. நல்ல காரசாரமாக இருக்கும் இந்த ஆலு கோபி மசாலா எளிதாக மற்றும் குறைந்த நேரத்தில் தயாரிக்க கூடிய ரெசிபி ஆகும்.

எனினும் இந்த ஆலு கோபி ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு முறைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த டிஷ் பொதுவாக அரிசி மற்றும் பருப்புடன் சாலட் மற்றும் ரொட்டி/பராத்தாவுடன் சேர்த்து சாப்பிடப்படுகிறது. தவிர இந்த டிஷ்ஷில் ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சத்தான உணவாகவும் இருக்கிறது. சரி, பலரும் ஹோட்டல்களில் சென்று விரும்பி சாப்பிடும் சுவையான மற்றும் காரமான ஆலு கோபியை வீட்டிலேயே செய்வதற்கான ஈஸி ரெசிபியை இங்கே பார்க்கலாம்.

ஆலு கோபி செய்ய தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2, காலிஃபிளவர் - 1, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா பவுடர் - 1 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1 பின்ச், தக்காளி -2, வெங்காயம் - 1, இஞ்சி - 1 இன்ச் அளவிலானது, பூண்டு பற்கள் - 2, கொத்தமல்லி தழை - 3, உப்பு - தேவைக்கேற்ப

ஆலு கோபி செய்முறை:

எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளை தோலுரித்து சிறிய க்யூப்ஸ்களாக வீதி கொள்ளுங்கள், எடுத்து வைத்திருக்கும் காலிஃபிளவரையும் சுத்தம் செய்து கேட் செய்து கொள்ளுங்கள். பின் இரண்டையும் வெட்டவும். மஞ்சள் கலந்த நீரில் ஊறவைத்து தனியே எடுத்து வைக்கவும்.
கடாய் ஒன்றை எடுத்து அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்து 2 டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி அது சூடான பிறகு சீரகம், பெருங்காயம் சேர்க்கவும். எண்ணெயில் வெடிக்கும் போது இஞ்சி, பூண்டு சேர்த்து அவற்றை பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
பின் வெங்கயத்தை எடுத்து பொடியாக நறுக்கி வாணலியில் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பிறகு இதோடு உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு இதோடு காலிஃபிளவர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். சில நிமிடங்கள் கழித்து நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து, காலிஃபிளவர் மற்றும் தக்காளி நன்கு சாஃப்டாகும் வரை வேக வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி எடுத்து வைத்துள்ள கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு வாணலியை மூடி போட்டு மூடி விடவும். சுமார் 5 - 7 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடுங்கள்.
பிறகு அடுப்பை அணைத்து வாணலியை கீழே இறக்கி மூடியை திறந்து தயாராக உள்ள ஆலு கோபி மீது கொத்தமல்லி தழைகளை தூவி விடுங்கள்.
First published:

Tags: Food, Recipe