முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காரசாரமான இறால் பெப்பர் வறுவல் செய்வது எப்படி?

காரசாரமான இறால் பெப்பர் வறுவல் செய்வது எப்படி?

சண்டே ஸ்பெஷல் சுவையான இறால் பெப்பர் வறுவல் செய்முறை!

சண்டே ஸ்பெஷல் சுவையான இறால் பெப்பர் வறுவல் செய்முறை!

Prawn Pepper Fry Recipe | ஒரு முறை இறால் வறுவலை இப்படி செய்து பாருங்கள்… வீட்டில் உள்ளவர்கள் அசந்துருவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நீங்கள் கடல் உணவுகளை விரும்புபவராக இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய நேரம் இது. ஏனெனில், உங்களுக்கு நாங்கள் ஒரு சூப்பரான ரெசிபியை கூறப்போகிறோம்.

தமிழக மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் கடல் உணவுகளில் இறாலும் ஒன்று.  இந்த இறால் மீனை கொண்டு காரசாரமான இறால் மிளகு வறுவல் (pepper fry) செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இறால் மீன் - 500 கிராம்.

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்.

இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்.

எண்ணெய் - 2 ஸ்பூன்.

உப்பு - தேவையான அளவு.

வெங்காயம் - 1.

பச்சை மிளகாய் - 2.

கறிவேப்பிலை - ஒரு கொத்து.

குடை மிளகாய் - 1.

கரம் மசாலா - 1 ஸ்பூன்.

மிளகு தூள் - 1 ஸ்பூன்.

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி.

செய்முறை :

முதலில் வறுவல் செய்ய எடுத்துக்கொண்ட இறாலை கல் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்துக்கொள்ளவும். பின்னர் இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி வைக்கவும்.

இறாலில் மசாலா சுவை நன்கு இறங்க, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு 15 முதல் 20 நிமிடத்திற்கு அப்படியே ஊற விட வேண்டும். அதாவது, இறால் இருக்கும் இந்த பாத்திரத்தை மூடி தனியே எடுத்து வைத்துவிடவும்.

தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் மெரினேட் செய்யப்பட்ட இறாலை சேர்த்து அரை வேக்காடாக பொரித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Also Read | குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து.. ஈசியா செய்யலாம் மக்ரோனி சூப்!

அதே கடாயில் எண்ணெய் சேர்த்து மீண்டும் சூடேற்றுங்கள். எண்ணெய் சூடேறியதும் அதில், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

மசாலா வாசம் மாறியதும் இதில் பெப்பர் (மிளகு தூள்) மற்றும் வறுத்து தனியே எடுத்து வைத்த இறால் ஆகிய இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும். இறால் நன்கு பொரிந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் ஒரு தேக்கரண்டி எலும்பிச்சை சாறு சேர்த்தால் இறால் பெப்பர் வறுவல் ரெடி!.

top videos

    காரசாரமான இந்த இறால் பெப்பர் வறுவலினை வெள்ளை சாதம், ரொட்டி என அனைத்து விதமான உணவுடன் சேர்த்து சுவையாக பரிமாறலாம். அலங்காரத்திற்கு தட்டில் புதினா இலை, எலுமிச்சை துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    First published:

    Tags: Food, Food recipes, Prawn Recipes