முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஒரு கிண்ணம் பூண்டாக இருந்தாலும் 30 நிமிடத்தில் உறிச்சிடலாம்... இந்த ட்ரிக்ஸ் தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

ஒரு கிண்ணம் பூண்டாக இருந்தாலும் 30 நிமிடத்தில் உறிச்சிடலாம்... இந்த ட்ரிக்ஸ் தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

பூண்டை உரிக்க எளிதான வழிகள்

பூண்டை உரிக்க எளிதான வழிகள்

ந்திய சமையலில் இருந்து சீன, இத்தாலியன் மற்றும் மெக்சிகன் உணவுகள் வரை, பூண்டு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பூண்டை உரிப்பது என்பது பலருக்கு கடினமான செயல். பலர் பூண்டை உரிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். இதனாலேயே சமையல் வேலைகளும் தாமதமாகும். அதேசமயம் சிரமம் காரணமாக பூண்டை தவிர்த்துவிடவும் முடியாது. ஏனெனில் அதுதான் காரக்குழம்பு தொடங்கி கறிக்குழம்புக்கு வரை சுவை ,மணம் மற்றும் ஆரோக்கியம் சேர்க்கிறது.

இப்படி இந்திய சமையலில் இருந்து சீன, இத்தாலியன் மற்றும் மெக்சிகன் உணவுகள் வரை, பூண்டு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டு உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சளி, இருமல் மற்றும் பல தொற்று நோய்களைத் தடுக்கவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தனை குணங்கள் நிறைந்த இந்த பூண்டில் உள்ள ஒரே சிரமம், தோலுரிப்பது மட்டும்தான். இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். இந்த டிப்ஸை கவனிங்க...

top videos

    பூண்டை உரிக்க எளிதான வழிகள் : 

    முதலில் ஒரு முழு பூண்டை எடுத்து அதில் இருந்து பூண்டு பற்களை தனியாக உறிக்கவும். இப்போது இந்த பூண்டு பற்களை உரிக்காமல் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் போடவும். சுமார் 2 நிமிடங்களுக்குப் பிறகு, அதை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து உங்கள் விரல் நகத்தால் உரிக்கவும். தண்ணீரில் ஊறவைத்த பிறகு, பூண்டு தோல் எளிதில் வந்துவிடும் நகங்களில் வலி இல்லாமலும் இருக்கும்.இப்படி செய்தால் 30 நிமிடங்களிலேயே ஒரு கிண்ணம் பூண்டை உறித்துவிடலாம்.
    நீங்கள் பூண்டின் மேல் பகுதியை கத்தியின் உதவியுடன் வெட்டி, பின்னர் தண்ணீரில் போட்டால், அதை இன்னும் எளிதாக உரிக்கலாம்.
    நீங்கள் விரும்பினால், பூண்டு மொட்டுகளை அகற்றி மைக்ரோவேவில் 30 விநாடிகள் வைக்கவும். பின் தோலை உறிக்க எளிதில் வந்துவிடும்.
    பூண்டை வாணலியில் சிறிது நேரம் வறுத்து பின் தோலுரித்துக் கொள்ளவும். தோல் எளிதில் உதிர்ந்து விடும்.
    பூண்டின் மேல் லேசாக மத்து கொண்டு இடித்தால் தோல் தனியாக பிரிந்து வந்துவிடும். பின் நீங்கள் அதை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்.
    First published:

    Tags: Cooking tips, Garlic, Kitchen Tips