முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மணமணக்கும் மட்டன் நெய் ரோஸ்ட்.! சுவையா சுலபமா செஞ்சிடலாம்.!

மணமணக்கும் மட்டன் நெய் ரோஸ்ட்.! சுவையா சுலபமா செஞ்சிடலாம்.!

மட்டன் நெய் ரோஸ்ட்

மட்டன் நெய் ரோஸ்ட்

ஞாயிற்றுக் கிழமையில்.. மதிய உணவிற்கு... சூடாக இந்த மட்டன் நெய் ரோஸ்ட் செய்து சாப்பிட்டு பாருங்கள்.. அப்புறம் விடவே மாட்டீங்க.!

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மட்டன் என்றாலே பொதுவாக எல்லோரும் செய்வது முதலில் மட்டன் பிரியாணி தான். இல்லையெனில் சிலர் மட்டன் குழம்பு செய்து சாப்பிட விரும்புவார்கள்.  அப்படி சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டது என நினைப்பவர்களுக்காகவே நாவின் சுவையரும்புகளை மலர வைக்க.. மதிய உணவிற்கு இந்த மணமணக்கும் மட்டன் நெய் ரோஸ்ட் செய்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள் :

மட்டன் - 1 கிலோ

நெய் - 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை

மசாலா அரைக்க..

காஷ்மீரி மிளகாய் - 10

மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - 2 டீஸ்பூன்

பட்டை - 1 அங்குலம்

கிராம்பு - 4

நட்சத்திர சோம்பு - 1

காய்ந்த மிளகாய் - 6

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 2 பல்

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

மட்டன் நெய் ரோஸ்ட் செய்வதற்கு முதலில் மட்டனை வேகவைக்க வேண்டும். அதற்கு ஒரு குக்கரில் முதலில் நெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு விழுது மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
அதன்பின் மட்டன் துண்டுகளை சேர்த்து மட்டன் முக்கால்வாசி மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து 4 - 5 விசில் வரை வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
மசாலா அரைப்பதற்கு முதலில் காஷ்மீரி மிளகாயை நன்கு வறுத்து தனியே எடுத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதே பாத்திரத்தில் மல்லி, மிளகு, சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வாசனை வந்தவுடன் அடுப்பை அனைத்து விட்டு சிறிது நேரம் அந்த பாத்திரத்தில் இருக்கும் சூட்டிலேயே வைத்து ஆறவிடுங்கள்.
அதன்பின்னர் மசாலாவை அரைக்க வறுத்து வைத்த அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இஞ்சி, பூண்டுப்பல் மற்றும் எலுமிச்சை சாறு சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து நன்றாக மைய அரைத்து கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு கடாயில் 1/4 கப் நெய் சேர்த்து நன்கு உருகியதும் அரைத்து வைத்த மசாலா பேஸ்ட், கெட்டித் தயிர், மட்டன் வேகவைத்த தண்ணீரை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து நெய் நன்கு பிரிந்து வரும் வரை கிளறவும்.
அதன்பின்னர் வேக வைத்த மட்டனை சேர்த்து 4-5 நிமிடங்கள் வரை நன்கு ரோஸ்ட் செய்யுங்கள்.
இறுதியாக வாசனைக்கு கறிவேப்பிலை இலை சேர்த்தால்.. மணமணக்கும் மட்டன் நெய் ரோஸ்ட் முற்றிலுமாக தயார்.
First published:

Tags: Mutton, Mutton recipes