இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களும், பெண்களும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் காலை உணவு , மதிய உணவு என அவர்களுக்கு மட்டுமில்லாது பள்ளிக்குச்செல்லும் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கும் தாய்மார்கள்.
குறிப்பாக பிஸியான வேலைநாள்களில் அவர்களால் சத்தான உணவுகளைச் செய்து தரமுடியாது. நிச்சயம் மிகுந்த சிரமமாக இருக்கும். இனி கவலை வேண்டாம். பிஸியான வேலை நாள்களிலும் மதிய உணவிற்கு நீங்கள் விரைவான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து தரலாம். இதோ சில ரெசிபி டிப்ஸ்கள் இங்கே..
மதிய உணவிற்கான ஆரோக்கியமான ரெசிபி வகைகள்....
சரக்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் குயினோவா சாலட்:
அரிசி, கோதுமைக்கு மாற்றாக முழுக்க முழுக்க புரதச்சத்துக்கள் நிறைந்த ஒரு முழுத்தானியமான குயினோவா மக்களிடம் மிகவும் பிரபலமாகிவருகிறது. இதை வைத்து நீங்கள் ஆரோக்கியமான மதிய உணவைச் சமைக்கலாம். இதை செய்வாற்கு முதலில் நீங்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
View this post on Instagram
பின்னர் ஒரு பாத்திரத்தில் கீரை, முட்டைக்கோஸ் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றுடன் சிறிது வேகவைத்த ப்ரோக்கோலி, கொண்டைக்கடலையைச் சேர்க்க வேண்டும். இதற்கு முன்னதாக நீங்கள் குயினோவாவை வேகத்துக்கொள்ள வேண்டும். இறுதியில் நீங்கள வேகவைத்த காய்கறி, குயினோவா மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து நீங்கள் சாலட் செய்து சாப்பிடுவதற்குக் கொடுக்கலாம்.
Also Read : Lunch Box Recipes : மதிய உணவுக்கு இந்த சூப்பரான முட்டை சாதம் செய்து கொடுங்கள்...
கொண்டைக்கடலை மற்றும் பனீர் சாலட்:
தக்காளி, வெள்ளரி, கேரட் மற்றும் பனீர் க்யூப்சுடன் வேக வைத்த கொண்டைக்கடலையை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சீரகத் தூள்,பூண்டு, மிளகு போன்ற மசாலாப் பொருள்களுடன் உங்களுக்கு விருப்பமான மசாலாக்களை அதனுடன் சேர்த்துக்கொள்ளவும்.
View this post on Instagram
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கொண்டைக்கடலை உள்பட அனைத்துப் பொருள்களையும் சேர்த்து சிறிதளவு எலுமிச்சை சாறு உடன் சேர்த்து கிளறினால் போதும். சுவையான கொண்டைக்கடலை மற்றும் பனீர் சாலட் ரெடி. விரைவாக இதைச் செய்து விட முடியும். எனவே உங்களது மதிய உணவிற்கு ரொட்டியுடன் இந்த சாலட்டைக் கொடுக்கலாம்
தக்காளி சேவை:
மதிய உணவிற்கு எங்களுக்கு சாலட்கள் பிடிக்கவில்லை என்றால், தக்காளி சேவை செய்து சாப்பிடலாம். இதற்கு முதலில் சேமியா அல்லது இடியாப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
View this post on Instagram
இதைச் செய்வதற்கு முதலில், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு போட்டு தாளித்து பழுத்த தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இதோடு சிறிதளவு எலுமிச்சைச் சாறு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் சேமியா அல்லது இடியாப்பத்துடன் சேர்த்து பிசைந்தால் போதும் சுவையான தக்காளி சேவை ரெடி. இதோடு நீங்கள் தேவைப்பட்டால் முந்திரி பருப்பு, கேப்சிகம், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் சேர்த்தால் போதும் சத்தான மதிய உணவு ரெடி. இதுப்போன்று நீங்கள் பிஸியான வேலை நாள்களிலும் செய்து சாப்பிடலாம். இனி நேரம் கிடைக்கவில்லை என வருத்தப்படத் தேவையில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food recipes, Lunch