சரியான உடல் எடையில் ஸ்லிம்மா இருக்கணும்னு யாருக்கு தான் ஆசை இருக்காது? எப்படியாவது உடல் எடையை குறைத்து ஃபிட்டா மாறிவிட வேண்டும் என்று நீங்கள் தீர்மானமாக இருந்தால் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு சில டேஸ்டான ஓட்ஸ் ரெசிபிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. ஓட்ஸ் மட்டர் ஷீலா:
தேவையான பொருட்கள்:
செய்முறை விளக்கம்:
ஓட்ஸை இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்துக் கொள்ளலாம். முதலில் பச்சை பட்டாணியை இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், ஓமம், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இரவு ஊற வைத்த ஒட்ஸில் தண்ணீர் எதுவும் இல்லாதவாறு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதனையும் கரடு முரடான பேஸ்ட் ஆக அரைத்து, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பட்டாணி பேஸ்டுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும். நெய் உருகியதும் நாம் கலந்து வைத்த மாவை ஊற்றி அடை போல பரப்பவும். இருபுறமும் வெந்தவுடன் சூடாக பரிமாறவும்.
2. மசாலா ஓட்ஸ்:
தேவையான பொருட்கள்:
செய்முறை விளக்கம்:
மசாலா ஓட்ஸ் செய்வதற்கு முதலில் ஓட்ஸை மொறுமொறுப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் நெய் ஊற்றி சீரகம் சேர்க்கவும். சீரகம் பொரிந்தவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து அதனை வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல வதங்கியதும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து 5-6 நிமிடங்கள் வதக்கவும். இந்த சமயத்தில் மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். அடுத்து கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நாம் வறுத்து வைத்துள்ள ஓட்ஸை சேர்க்கவும். இதனை ஐந்து முதல் ஆறு நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்கவும். பின்னர் சூடாக பரிமாறவும்.
Also Read | விரைவாக எடையை குறைக்க ஓட்ஸை எப்படியெல்லாம் சாப்பிடலாம்..?
3. ஓட்ஸ் வெஜ் ஆம்லெட்:
தேவையான பொருட்கள்:
செய்முறை விளக்கம்:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள ஓட்ஸை மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், ஆரிகனோ மற்றும் மிளகுப்பொடி சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்தபடியாக முட்டை சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும். ஒரு தோசை கல்லை சூடு செய்து அதில் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இப்போது நாம் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து மூன்று ஐந்து நிமிடங்கள் வதக்கவும். இதில் நாம் தயார் செய்து வைத்துள்ள கலவையை சமமாக ஊற்றவும். ஆம்லெட் இருபுறமும் வெந்தவுடன் சூடாக பரிமாறவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diet, Oats, Oats Recipe in Tamil, Weight loss