முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உருளைக்கிழங்கை இப்படி செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!

உருளைக்கிழங்கை இப்படி செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!

சால்சா பொட்டேடோ

சால்சா பொட்டேடோ

எப்பவும் போல உருளை கூழங்கை வைத்து பொரியல், கூட்டுனு வைக்காமல் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. உங்க வீட்டுல இருக்கவங்க அசந்து போயிருவாங்க.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உருளைக்கிழங்கை பிடிக்காத மனிதர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், இதில் சிக்கனுக்கு நிகரான சுவை உள்ளது. உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது.

உருளை கிழங்கைவைத்து ஒரு புதிய ரெசிபியான சால்சா பொட்டேடோ பற்றி நாங்கள் கூறுகிறோம். இது உங்கள் வீட்டில் இருப்பவர்களு மிகவும் பிடிக்கும். சால்சா பொட்டேடோ எனப்படுவது, ஒரு சில மசாலாக்களுடன் உருளைகிழங்கு சேர்த்து வித்தியாசமான முறையில் செய்யப்படும் ஒரு வகை ஸ்நாக்ஸ் ஆகும். சுவையான இந்த ஸ்நாக்ஸினை எளிமையான முறையில் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 3.

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.

கருப்பு மிளகு பொடி - 1 ஸ்பூன்.

கொத்தமல்லி பொடி - 1 ஸ்பூன்.

வெங்காயம் - 1.

தக்காளி - 1.

எலுமிச்சை பழம் - 1.

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

சமைக்க எடுத்துக்கொண்ட உருளைக் கிழங்கினை தோல் சீவி சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின் மைக்ரோ ஓவனில் இந்த உருளை துண்டைகளை (450°F வெப்பநிலையில்) வைத்து, பேக் செய்து பின் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதனிடையே எடுத்துக்கொண்ட வெங்காயம் மற்றும் தக்காளியினை பொடியாக நறுக்கி தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

Also Read | செட்டிநாடு ஸ்டைல் வாழைப்பூ கிரேவி செய்வது எப்படி? - இதோ ரெசிபி

தற்போது பெரிய பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் பேக் செய்த உருளைக் கிழங்கினை சேர்த்துக் கொள்ளவும்.

இதை தொடர்ந்து அதில், மிளகாய் தூள், மிளகு பொடி, கொத்தமல்லி பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு ஒரு முறை கலந்துக் கொள்ளவும்.

தற்போது இதனுடன், நறுக்கி வைத்த தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

இறுதியாக, எலுமிச்சம் பழம் ஒன்று எடுத்து இரண்டாக வெட்டி, சாறு புழிந்து தேவையான ஆளவு இந்த உருளை சேர்மத்தின் மீது சேர்த்து கலந்துக்கொள்ள சுவையான சால்சா பொட்டேடோ ரெடி!

First published:

Tags: Food, Food recipes, Potato, Potato recipes, Sweet Potato