முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சிக்கன் 65 ரெசிபி.. ரோட்டு கடை சுவையில் செய்ய தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ...

சிக்கன் 65 ரெசிபி.. ரோட்டு கடை சுவையில் செய்ய தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ...

சிக்கன் 65

சிக்கன் 65

கடையில்தான் அந்த சுவை கிடைக்கும் என்பதில்லை. வீட்டிலேயே பக்குவமாக செய்தால் அந்த சுவையைப் பெறலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிக்கன் 65 என்று சொன்னாலே வாயில் எச்சில் ஊறும். உடனே சுவைத்து பார்க்கத் தூண்டும். ஆனால் கடையில்தான் அந்த சுவை கிடைக்கும் என்பதில்லை. வீட்டிலேயே பக்குவமாக செய்தால் அந்த சுவையைப் பெறலாம். எப்படி என்று பார்க்கலாமா..?

தேவையான பொருட்கள்

சிக்கன் - ஒரு பவுல்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tsp

கடலை மாவு -1/2 கப்

சோள மாவு - 2 tsp

மிளகாய் தூள் - 3 tsp

கரம் மசாலா - 1 tsp

முட்டை - 2

உப்பு - தே . அளவு

தண்ணீர் - அரை கிளாஸ்

தயிர் - 2 tsp

செய்முறை :

சிக்கனை சுத்தம் செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் மசாலாக்கள் கலக்கும் வரை பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்ததும் இறுதியாக தயிர் சேர்த்து பிசைய வேண்டும்.

தற்போது இந்த கலவையில் சிக்கனை அரை மணி நேரம் ஊற வையுங்கள். அடுத்ததாக பொறிக்க, கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றுங்கள்.

top videos

    எண்ணெய் நன்கு காய்ந்ததும் சிக்கனை தூவுங்கள். சிக்கனை எண்ணெய் நன்கு காய்ந்த பிறகே போட வேண்டும். இல்லையெனில் மாவு திரிந்து வரும்.

    First published:

    Tags: Chicken recipe