முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சமையலுக்கு 'ரைஸ் பிரான் ஆயில்' பயன்படுத்துவது நல்லதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

சமையலுக்கு 'ரைஸ் பிரான் ஆயில்' பயன்படுத்துவது நல்லதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

ரைஸ் பிரான் ஆயில்

ரைஸ் பிரான் ஆயில்

Rice bran oil | அரிசி தவிட்டு எண்ணெய் என்பது தான் 'ரைஸ் பிரான் ஆயில்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது அரிசியின் சாஃப்(chaff) எனப்படும் வெளிப்புற அடுக்கில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் நாட்டை பொருத்த வரை அனைவரின் வீட்டு சமையலறையிலும் முக்கிய இடம் பிடிப்பது சமையல் எண்ணெய். பொரித்தல், வறுத்தல் என்று அனைத்து வகையான சமையலுக்கும் எண்ணெயின் பங்கு இன்றியமையாதது. இப்படி நம் சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் எண்ணெய், உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக வாழவும் உதவுகிறது.

எண்ணெயில் இருக்கும் புரத சத்துக்கள் நம் உடலுக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல நன்மைகளை செய்கின்றன சமையலுக்கு நாம் பயன்படுத்தும் எண்ணெய்.

பொதுவாக சமையலில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் சேர்ப்பதை தவிர்த்து தேவையான அளவு சேர்த்து கொள்வதே நன்மை என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது சரி தான் என்றாலும் கூட நாம் தேர்ந்தெடுக்கும் எண்ணெயில் தான் நம் உடலுக்கு தேவையான நன்மை, தீமை அடங்கி இருக்கிறது என்பதும் இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. கடுகெண்ணெய், தூய பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் ஆரோக்கியமான எண்ணெய்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் போது இந்த பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ஒன்று ரைஸ் பிரான் எண்ணெய் (Rice Bran Oil). உண்மையில் ரைஸ் பிரான் எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியமானதா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ரைஸ் பிரான் ஆயில் என்றால் என்ன.?

அரிசி தவிட்டு எண்ணெய் என்பது தான் 'ரைஸ் பிரான் ஆயில்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது அரிசியின் சாஃப்(chaff) எனப்படும் வெளிப்புற அடுக்கில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிக அளவு உள்ளது. இந்த எண்ணெயின் அதிக புகை புள்ளி(high smoke point) 232 ° C (450 ° F) மற்றும் மிகவும் லேசான ஃபிளேவேர் காரணமாக இது ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களில் ஒன்றாக கூறப்படுகிறது. கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ரைஸ் பிரான் ஆயில் ,ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமான சமையல் எண்ணெயாக கருதப்படுகிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மற்றும் உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்டவையும் இந்த எண்ணெயை பரிந்துரைத்துள்ளன.

ரைஸ் பிரான் ஆயிலின் நன்மைகள் : 

இந்த எண்ணெயில் சீரான கொழுப்பு அமில கலவை உள்ளது. இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. பல நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் 37% மற்றும் ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் 45% ரைஸ் பிரான் ஆயிலில் அடங்கி உள்ளது. தாவர எண்ணெய்க்கு ஒரு சிறந்த மாற்றாக இந்த எண்ணெய் கருதப்படுகிறது. வைட்டமின் ஈ சத்து இதில் நிறைந்துள்ளதால் இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகவும் மற்றும் புற்று நோய் அபாயத்தைக் குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Also Read : இட்லி மாவு உடனே புளிக்கணுமா? இதை செய்யுங்க போதும்..!

இந்த எண்ணெயை சமையலில் சேர்த்து கொள்வதால் இன்சுலின் எதிர்ப்பு தன்மை மேம்படுகிறது. இதனால் டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. உடலின் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் இது பெரும்பங்கு வகிக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகளின்படி, இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற எண்ணெயாகக் கருதப்படுகிறது. இதில் சரியான அளவு ஒரைசனால் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுப்பதால் இதயநோய் வராமல் இருக்க உதவும் என்று கருதப்படுகிறது. மேலும் இந்த எண்ணையில் ஃபெரோலிக் அமிலம் மற்றும் சைட்டொஸ்டெரால் போன்றவை இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது.

பக்க விளைவுகள்:

இதில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் அதிகம் சேர்த்து கொள்ளும் போது சில நேரங்களில் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த எண்ணெயை அதிகமாக உணவில் சேர்த்து கொள்வது குடல் சார்ந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ரைஸ் பிரான் ஆயிலை தவிர்க்க வேண்டும் என உணவு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் இது வயிற்றில் உள்ள கரு மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமான மண்டலத்தை இது சுருக்கி தடுக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

First published:

Tags: Cold press oil, Cooking Oil, Health Benefits