பொதுவாக பலர் ஹெவியான மீல்ஸ் சாப்பிட்ட பிறகு வயிற்றில் இறுக்கி கட்டி இருந்த பேன்டை சற்று தளர்த்தி கட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் மெத்தையில் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். இது வயிற்று உப்புசம் என்று அழைக்கப்படுகிறது. இதன் போது உங்கள் வயிறு நிரம்பியதாகவும், இறுக்கமாகவும், லேசான வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் தென்படும்.
வயிற்று உப்புசம் ஒரு தீவிர உடல் நல பிரச்சனை இல்லாமல் போனாலும் கூட, அது அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதால் வழக்கமான வேலைகளை செய்வதில் சிக்கல் எழுகிறது. செரிமான அமைப்பில் வாயுக்கள் அதிகப்படியாக குவிக்கின்ற காரணத்தால் வயிற்று உப்புசம் உண்டாகிறது.
வயிற்று உப்புசம் ஏற்பட முதன்மை காரணம் என்ன?
வயிற்று உப்புசம் என்பது ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு காரணத்தினால் ஏற்படலாம். அதிகப்படியாக உணவு சாப்பிடுவது, விரைவாக உணவை சாப்பிடுவது, சரியாக மெல்லாமல் உணவை அப்படியே விழுங்குவது என இதற்கு பல காரணங்கள் உண்டு. உணவை உடைக்கும் பொழுது உருவாகும் வாயுக்களானது வெளியேறாமல் வயிற்றிலே தங்கிவிடும் காரணத்தினால் வயிற்று உப்புசம் ஏற்படுகிறது.
வயிற்று உப்புசத்தில் இருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்?
ஒரே நேரத்தில் அதிகப்படியான உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, சிறிய அளவுகளாக பிரித்து சாப்பிடுவது பயனுள்ளதாக அமையும். அதுபோல உணவை நன்கு மென்று சாப்பிடுவது அதை எளிதில் ஜீரணமாவதற்கு உதவி புரியும். இதனை செய்த பிறகும் உங்களுக்கு வயிற்று உப்புசம் ஏற்படுகிறது என்றால் நீங்கள் இயற்கையான வழிகள் மூலம் அதிலிருந்து நிவாரணம் பெற முயற்சி செய்யலாம்.
அப்படி உங்களுக்கு உதவக்கூடிய ஒரு பானம்தான் டீ-புலோட் டீ என்று அழைக்கப்படுகிறது. இது வயிற்று உப்புசத்தை போக்கக்கூடிய ஒரு தேநீராகும். இஞ்சி, புதினா மற்றும் வெந்தயம் கொண்டு தயாரிக்கப்படும் இந்த தேநீர் வயிற்று உப்புசத்தில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. இந்த பொருட்கள் செரிமானம் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மருத்துவம் ஆகும்.
Also Read | டீ அல்லது காஃபி அருந்தும் முன் தண்ணீர் குடிக்க வேண்டுமா..? நிபுணர்களின் கருத்து...
இந்த தேநீரில் பயன்படுத்தப்படும் இஞ்சி செரிமான பிரச்சனைகளை சரி செய்யும் திறன் கொண்டது. இதில் காணப்படும் ஜின்ஜிபெயின் என்ற நொடதியானது உணவில் காணப்படும் புரதத்தை உடைத்து செரிமானத்தை எளிதாகிறது.
அடுத்தபடியாக புதினா இலைகளில் காணப்படும் மெந்தால் ஆன்டிசெப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதன் காரணமாக இது செரிமான ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் நெஞ்செரிச்சல், வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கு புதினா ஒரு சிறந்த ஹோம் ரெமடியாக அமைகிறது.
வெந்தயத்தில் தைமால் என்ற சேர்மம் காணப்படுகிறது. இது செரிமான நொதிகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. அதோடு வெந்தயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இயற்கையாகவே காணப்படுகிறது. இது குமட்டல் மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. வெந்தயத்தில் காணப்படும் அதிகப்படியான நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. இத்தனை நன்மைகள் கொண்ட இந்த மூன்று பொருட்களையும் கொண்டு தேநீர் எப்படி தயாரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.
View this post on Instagram
வயிற்று உப்புசத்தை போக்க உதவும் இஞ்சி புதினா வெந்தய தேநீர் எப்படி தயாரிப்பது?
ஒரு டம்ளர் தேநீர் தயாரிக்க ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் பொழுது அதில் ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சி, 5 இல் இருந்து 6 புதினா இலைகள், ஒரு ஸ்பூன் வெந்தய விதைகள் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி தேநீரை வடிகட்டிக் கொள்ளலாம். இதில் ஓரிரு துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் பிளாக் சால்ட் கலந்து வெதுவெதுப்பாக பருகலாம். சுவையான இந்த தேநீரை பருகி வயிற்று உப்புசத்திற்கு விரைவில் குட்பை சொல்லுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bloating, Herbal Tea, Stomach Bloating