முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காலை உணவுக்கு ராகி ரவா உப்புமா செய்ய ரெசிபி..!

காலை உணவுக்கு ராகி ரவா உப்புமா செய்ய ரெசிபி..!

ராகி ரவை உப்புமா

ராகி ரவை உப்புமா

Ragi Rava Upluma | எப்பொழுதும் ஒரே மாதிரி ரவை உப்புமா செய்வதற்கு பதில் இந்த முறையில் ராகி மாவு சேர்த்து செய்யும்போது வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்கள்...

  • Last Updated :
  • Tamil Nadu, India

ராகி ரவ உப்புமா ஒரு ஆரோக்கியமான காலை உணவு. இது சுகர் உள்ளவர்கள் தினமும் எடுத்துக் கொள்ளலாம். ராகி உடலுக்கு குளுர்ச்சி தரும் உணவு என்பதால் வெயில் காலத்தில் இது பிரதான உணவாக எடுத்துக்கொள்ளப்படும். குறிப்பாக கிராமங்களில் இந்த உணவுப் பழக்கம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் நீங்களும் ராகி (கேழ்வரகு) பயன்படுத்த நினைத்தால் இந்த ராகி உப்புமாவை செய்து சாப்பிடுங்கள்...

தேவையான பொருட்கள்

ரவை - 1 கப்

ராகி மாவு - 1/2 கப்

வெங்காயம் -1 பெரிய

மிளகாய் - 4 பச்சை

மிளகாய் - 2 வர

பச்சை பட்டாணி - 3 ஸ்பூன்

பொடியாக நறுக்கிய கேரட் - 3 ஸ்பூன்

கடுகு -1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

முந்திரி -5

கருவேப்பிலை

மல்லிதழை

ஆயில் - 4 ஸ்பூன்

நெய் - 1 ஸ்பூன்

தண்ணீர் -4 கப்

உப்பு - தேவையானஅளவு

செய்முறை

1. முதலில் ராகி, ரவா முந்திரி பச்சை பட்டாணி, கேரட் வெங்காயம் பச்சை மிளகாயை நறுக்கி எடுத்து வைக்க வேண்டும்.

2. ஒரு வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு ரவை, ராகி மாவு சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும். பின்னர் அதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

3. பின்னர் வாணலியில் கடுகு, உளுந்து, முந்திரி தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

4. அதில் பச்சை பட்டாணி, கேரட், துருவிய இஞ்சி சிறிதளவு கறிவேப்பிலை மல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கவும். 4 கப் தண்ணீர் தேவையான உப்பு போட்டு கலந்து விடவும்.

5. இப்போது மூடி வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து வறுத்த ரவை ராகி மாவை தூவி கிளறவும். கட்டியாகாமல் கிளறி விடவும்.

6. சிறிதளவு நெய் விட்டு கலந்து மூடி வைத்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும். மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான ராகி ரவா உப்புமா ரெடி.

top videos

    7. இதை பொட்டுக்கடலை தேங்காய் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    First published:

    Tags: Ragi