முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சுவையான முந்திரிப் பருப்பு பிஸ்கட் செய்ய ரெசிபி...

சுவையான முந்திரிப் பருப்பு பிஸ்கட் செய்ய ரெசிபி...

முந்திரி பருப்பு பிஸ்கட்

முந்திரி பருப்பு பிஸ்கட்

cashew nuts biscuits | முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. வளரும் குழந்தைகள் சாப்பிட நல்லது.

 • Last Updated :
 • Tamil Nadu, India

குழந்தைகளுக்கு முந்திரி பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் முந்திரி பிஸ்கட் தயார் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்

கோதுமை மாவு - 2 கப்

சர்க்கரைப் பொடி அல்லது பவுடர் - 1  1/2 கப்

வெண்ணெய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

பேக்கிங் சோடா -  1/2 டீஸ்பூன்

முட்டை - 2

பால் பவுடர் - 1கப்

முந்திரிப் பருப்பு அரைத்தது - 2 கப்

வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

top videos

  செய்முறை 

  முதலில் கோதுமை மாவில் சோடா, பால் பவுடர், உப்பு ஆகிய இவற்றைச் சேர்த்து இரண்டு முறை சலித்துக் கொள்ள வேண்டும்.
  பின்னர் முட்டையுடன் வெனிலா எசன்ஸைச் சேர்த்து நன்கு அடித்து இதைச் சிறிது சிறிதாக வெண்ணெயில் சேர்க்க வேண்டும். அதன் பிறகு இதில் முந்திரி மாவையும் மொத்தமாக இந்த மாவுடன் சேர்த்து நன்றாகக் பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை குளிர் சாதனப் பெட்டி அல்லது ஒரு குளிர்ச்சியான இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.
  பின்னர் பிசைந்த மாவை சப்பாத்தி பதத்திற்கு தேய்த்து முந்திரி பருப்பு வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  இந்தப் பிஸ்கட்டுகளை வைத்து 350 டிகிரி பாரன் ஹீட் வெப்ப நிலையில் சுமார் 15 - 20 நிமிடம் வேக விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். இதோ இப்போது சுவையான முந்திரிப் பருப்பு பிஸ்கட் தயார்.
  First published:

  Tags: Biscuit, Cashew Nuts, Evening Snacks