ஷீர் குர்மா என்பது ஈத் பண்டிகை அன்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் வெர்மிசெல்லி புட்டின் அல்லது பாயாசம் ரெசிபியாகும். ரமலான் அன்று சமைக்கப்படும் உணவுகளில் ஷீர் குர்மா கண்டிப்பாக இடம் பெறும். 'ஷீர்' என்பது பாலைக் குறிக்கும் மற்றும் 'குர்மா' என்பது பேரிச்சம்பழத்தின் மற்றொரு சொல். ஈத் ரெசிபியான ஷீர் குர்மா எப்படி செய்வது என இந்த தொகுப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - 1 லிட்டர்.
சேமியா அல்லது வெர்மிசெல்லி - 1 கப்.
நெய் - 2 ஸ்பூன்.
முந்திரி , பாதாம் , பிஸ்தா, பேரிச்சை - தேவையான அளவு.
ஏலக்காய் பொடி - ஒரு சீடிகை.
சர்க்கரை - 1/2 கப்.
ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்.
குங்குமப் பூ - 1/4 ஸ்பூன்.
ஷீர் குர்மா செய்முறை :
ஷீர் குர்மா செய்யவதற்கு முன், ஒரு கடாயில் நெய் சேர்த்து எடுத்து வைத்துள்ள முந்திரி , பாதாம் , பிஸ்தா, பேரிச்சை ஆகியவற்றை தனியே வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
இப்போது, எடுத்து வைத்துள்ள சேமியாவை சிறிய துண்டுகளாக உடைத்து 1 ஸ்பூன் நெய் ஊற்றி பொன்னிறமாக வறுது தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இதையடுத்து, ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி நன்குக் காய்ச்சவும்.
Also Read | Eid-ul-Fitr 2023 : ரம்ஜான் பண்டிகைக்கு கம கம ஹைதரபாத் பிரியாணி செய்து அசத்துங்க.. இதோ ரெசிபி..!
பால் நன்றாக காய்ந்ததும் வறுத்த சேமியாவை பாலுடன் சேர்க்க வேண்டும். அதோடு எடுத்து வைத்துள்ள சர்க்கரையையும் சேர்க்கவும். சேமியா நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
இப்போது, வறுத்து வைத்துள்ள நட்ஸ், ரோஸ் வாட்டர் , ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்த்துக் ஒரு முறை கலக்கவும். அதை 5 நிமிடம் அப்படியே மூடி வைத்துவிடவும்.
ஐந்து நிமிடங்களுக்கு பின் மூடியை திறந்தால், சுவையான ஷீர் குர்மா தயார். இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதில் ரோஜா இதழ்களை சேர்த்து பரிமாறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Eid Mubarak, Food recipes, Ramzan