முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Eid-ul-Fitr 2023 : இந்த ரம்ஜானுக்கு சுவையான மட்டன் பிரியாணி செய்ய ரெசிபி..

Eid-ul-Fitr 2023 : இந்த ரம்ஜானுக்கு சுவையான மட்டன் பிரியாணி செய்ய ரெசிபி..

மட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி

ரம்ஜான் பண்டிகை நாளில் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் பிரியாணி சமைப்பார்கள் என்றாலும், தமிழகத்தில் நம்முடைய பாரம்பரியமான மசாலாக்களை பயன்படுத்தி செய்கின்ற பிரியாணிக்கு தனித்த மனமும், சுவையும் நிச்சயமாக உண்டு. அதிலும் ஆட்டுக்கறி பிரியாணி என்றால் எல்லோருக்கும் தனி விருப்பம் உண்டு.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டமும், குதூகலமும் நிரம்பியிருக்கும். அத்துடன் சுவையான உணவு வகைகளும் தான். பட்டாசு மற்றும் பலகாரங்கள் இல்லாத தீபாவளி, கேக் இல்லாத கிறிஸ்துமஸ் போன்றவற்றை எப்படி நினைத்து கூட பார்க்க முடியாதோ, அதேபோலத்தான் ரம்ஜான் பண்டிகையும் பிரியாணி இன்றி முழுமை அடையாது.

ரம்ஜான் பண்டிகை நாளில் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் பிரியாணி சமைப்பார்கள் என்றாலும், தமிழகத்தில் நம்முடைய பாரம்பரியமான மசாலாக்களை பயன்படுத்தி செய்கின்ற பிரியாணிக்கு தனித்த மனமும், சுவையும் நிச்சயமாக உண்டு. அதிலும் ஆட்டுக்கறி பிரியாணி என்றால் எல்லோருக்கும் தனி விருப்பம் உண்டு. அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

பிரியாணிக்கு இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், பட்டை, லவங்கம், ஏலக்காய், எண்ணெய், நெய், உப்பு இவை மிக, மிக முக்கியமான மூலப் பொருட்கள் ஆகும். இவற்றை தவறவிடாதீர்கள். இஞ்சி 3 இன்ச் அளவு, பூண்டு - 15 பல், பெரிய வெங்காயம் - 4 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3, நெய் - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் என்ற அளவில் எடுத்துக் கொள்ளவும்.

லவங்க பட்டை - 3 இன்ச் அளவு, அன்னாசிப்பூ - 1, லவங்கம் - 5, ஏலக்காய் - 3, பிரியாணி இலை - 2, தக்காளி - 2 நறுக்கியது, மட்டன் - 750 கிராம், தனி மிளகாய் தூள் - அரை டீ ஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை தலா கால் கப் அளவு, பாஸ்மதி அரிசி - 3 கப், எலுமிச்சை பழம் - 1 எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை :

  • இஞ்சி மற்றும் பூண்டுகளில் தோல் நீக்கி, அதை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • குக்கர் அல்லது தனி பாத்திரத்தை சூடேற்றி அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். பின்னர் பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து பொறிக்கவும்.
  • நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் வதக்கவும்.
  • இப்போது இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரையில் வதக்கவும்.
  • தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதங்கிய பின்னர், மட்டன் சேர்த்து வதக்கவும்.
  • மட்டனில் உள்ள நீர் இறங்கி, கறியின் நிறமும் மாறி வரும் நேரத்தில் மிளகாய் தூள் சேர்த்து பிறட்டவும்.
  • பின்னர் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிய பின்னர், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 30 நிமிடம் வரை வேக விடவும்.
  • இப்போது பாஸ்மதி அரிசி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். குக்கர் என்றால் 3 முதல் 4 விசில் வந்தவுடன் இறக்கவும். தனி பாத்திரம் என்றால் அதை மூடி வைத்து, மேலே கரி நெருப்பு அல்லது சூடான தண்ணீர் பாத்திரம் வைத்து 20 நிமிடம் கழித்து தம் பிரிக்கவும். வீட்டில் எல்லோருக்கும் இந்த பிரியாணி பிடித்தமானதாக இருக்கும்.
top videos

    First published:

    Tags: Mutton Biriyani, Mutton recipes, Ramzan