ரம்ஜான் நோன்பு முடிவடைய உள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட ஆவலோடு காத்திருக்கின்றனர். இஸ்லாமியர்களின் நோன்பை முடிக்கும் விதமாக இஃப்தர் என்ற பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது.
இஃப்தரின் போது குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து சுவையான உணவுகளை உண்டு மகிழ்வார்கள். சிறப்பு வாய்ந்த உணவுகளை சமைத்து தங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள். சமோசா மற்றும் பக்கோடா போன்ற ஸ்நாக்ஸ் வகைகளில் ஆரம்பித்து, பிரியாணி மற்றும் கெபாப் போன்ற முதன்மை பண்டங்கள் வரை அனைத்து விதமான உணவுகளும் இஃப்தரில் காணப்படும்.
பாரம்பரிய உணவுகளில் தொடங்கி நவீன கால உணவுகள் வரை எல்லா வகையான உணவுகளும் இஃப்தர் மெனுவில் இருக்கும். இந்த ரம்ஜான் பண்டிகையில் ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்து கொண்டு இருந்தால், உங்களுக்கான சில ரெசிபிகள் இதோ :
1. ஜொவர் அவுர் கத்தல் கா ஹலீம்:
தேவையான பொருட்கள்:
சோளம் (முழு): 1 கப்
பலாக்காய்: 2 கப்
உளுத்தம்பருப்பு (தோல் நீக்கியது): ¼ கப்
கடலைப்பருப்பு: ¼ கப்
தண்ணீர்: 5 கப்
பால்: 3 கப்
மஞ்சள் தூள்: ½ தேக்கரண்டி
சீரகம்: ¼ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது: 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் விழுது: 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி: 1 தேக்கரண்டி
மல்லித்தூள் : ½ தேக்கரண்டி
மசாலா பொருட்கள்: ஒவ்வொன்றிலும் 1 துண்டு
(கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ, ஜாதிக்காய், மிளகு, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், கெபாப்சினி)
முந்திரி பருப்பு: ½ கப்
வெங்காயம் (பொன்னிறமாக பொரித்து எடுத்தது): 2 தேக்கரண்டி
சமையல் எண்ணெய்: 1 தேக்கரண்டி
நெய்: 4 தேக்கரண்டி
தேவைக்கேற்ப உப்பு
அலங்கரிக்க:
பொரித்த வெங்காயம்: தேக்கரண்டி
நறுக்கிய புதினா: ½ தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி: தேக்கரண்டி
எலுமிச்சை துண்டுகள்: 2
செய்முறை:
முதலில் வெட்டி வைத்த பலாக்காயில் பாதி அளவு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைக்கவும். ஊற வைத்த இந்த பலாக்காயை எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
இப்பொழுது ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் மற்றும் பாலை ஊற்றவும். இதனோடு எடுத்து வைத்துள்ள முழு மசாலா பொருட்கள், ஊறவைத்த திணை மற்றும் சோளம் ஆகியவற்றை சேர்க்கவும். நாம் சேர்த்த பொருட்கள் அனைத்தும் வேகும் வரை காத்திருக்கவும்.
இப்பொழுது முந்திரிப் பருப்பு சேர்த்து கொள்ளலாம். தண்ணீர் வற்றும் வரை காத்திருக்கவும். வேகவைத்த இந்த பொருட்களை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம், மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்க்கவும். இந்த சமயத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் போன்றவற்றை சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால் கூடுதலாக பால் சேர்த்துக் கொள்ளலாம். பொருட்கள் அனைத்தும் சரியான நிலைத்தன்மையை அடையும் வரை கிளறவும். கடைசியாக பொரித்த வெங்காயம் மற்றும் நெய் சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலை, எலுமிச்சை துண்டுகள் மற்றும் பொரித்த வெங்காயத்துடன் இதனை பரிமாறவும்.
Also Read | உடலுக்கு ஆற்றல், ஆரோக்கியம் தரும் கேழ்வரகு புட்டு செய்வதற்கான சிம்பிள் டிப்ஸ்.!
2. லாப்சி ஃபாக்ஸ்டெயில் மில்லட் ஸ்வீட் போரிட்ஜ் அல்வா:
இது தினை அரிசி வெண்ணை மற்றும் நட்ஸ் வகைகளை கொண்டு செய்யப்படும் குஜராத்தை சேர்ந்த ஒரு பாரம்பரிய இனிப்பு வகையாகும்.
தேவையான பொருட்கள்:
முழு தினை அரிசி: 1 கப்
பாசிப்பருப்பு: 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி: 1 தேக்கரண்டி
வெள்ளம்: 1/4 தேக்கரண்டி
நெய்: 3 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு: 2 தேக்கரண்டி
செய்முறை :
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாசிப்பருப்பை சேர்க்கவும். அது பொன்னிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ளலாம். இப்பொழுது அதே பாத்திரத்தில் நாம் வறுத்து வைத்த பாசிப்பருப்பு, திணை அரிசி, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்கவும்.
இதனோடு இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றவும். கடாயை மூடி பொருட்கள் அனைத்தையும் மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ளலாம். இவை வேக 30 நிமிடங்கள் வரை ஆகும். பொருட்கள் அனைத்தும் வெந்ததும் இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
இப்பொழுது ஒரு கடையை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் சேர்த்து முந்திரி பருப்பு பொன்னிறமாக மாறும் வரை அதனை வறுக்கவும். இப்பொழுது நாம் வேகவைத்து எடுத்த கலவையை இதனோடு சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடலாம். இந்த ஹல்வா இப்பொழுது பரிமாற தயாராக உள்ளது.
3. ராகி பர்ஃபி:
தேவையான பொருட்கள்:
ராகி மாவு: 15 கிராம் – 1 தேக்கரண்டி
வெள்ளம்: 20 கிராம் – தேக்கரண்டி
பாதாம் பருப்பு: 5
முந்திரிப்பருப்பு: 5
பால்: 10 எம்எல் – 2 தேக்கரண்டி
நெய்: 5 எம்எல் – 1 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
இப்பொழுது ராகி பர்ஃபி செய்வதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்க்கவும். நெய் உருகியதும் நாம் எடுத்து வைத்துள்ள ராகி மாவை சேர்த்து கட்டிகள் எதுவும் இல்லாதவாறு வறுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளம் முழுவதுமாக உருகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். இதற்கு இடையே முந்திரிப்பருப்பு மற்றும் பாதாம் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளலாம். இந்த பொடியை வெல்லம் மற்றும் ராகி மாவுடன் சேர்த்து கிளறவும்.
Also Read | ஜவ்வரிசி வைத்து ஒரு சூப்பர் லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்யலாமா..?
மாவு கெட்டியாக ஆரம்பிக்கும் பொழுது பால் சேர்த்து கிளறவும். ராகி மாவு நன்றாக வெந்து கடாயில் ஒட்டாமல் வரும் பொழுது அடுப்பை அணைத்து நெய் தடவிய ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். அது ஆறிய உடன் உங்களுக்கு விருப்பமான அளவுகளில் வெட்டி பரிமாறவும்.
4. ஷாகி ஹலீம்:
ஊற வைக்க தேவையான பொருட்கள்:
உடைத்த கோதுமை - 400 கிராம்
ஓட்ஸ் – 4 தேக்கரண்டி
பாசிப்பருப்பு – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
பார்லி – 4 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
பாதாம் பருப்பு – 10
முந்திரிப் பருப்பு – 10
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பருப்பு மற்றும் நட்ஸ் வகைகள் அனைத்தையும் சுத்தமாக கழுவி குறைந்தபட்சம் 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
மட்டனை ஊற வைக்க தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் எலும்பு – 600 கிராம்
ஆட்டுக் கொழுப்பு – 100 கிராம்
வெள்ளை மிளகு பொடி – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் விழுது – 2 தேக்கரண்டி
ஸ்பெஷல் கரம் மசாலா – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 200 கிராம்
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
தயிர் – 180 கிராம்
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் ஆட்டுக்காலை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஆட்டுக்கால் மற்றும் கொழுப்பை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளலாம். இவை இரண்டையும் ஒரு வடிகட்டியில் வைத்து தண்ணீர் முழுவதுமாக வடியும் வரை காத்திருக்கவும்.
Also Read | பூசணிக்காய் வைத்து ஒரு சூப்பரான பனாரஸி அல்வா செய்யலாமா..? இதோ ரெசிபி..
இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து மட்டன் கால் மற்றும் மட்டன் கொழுப்பை சேர்க்கவும். இதனோடு மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் கைகளால் கிளறி ஊற வைக்கவும்.
ஸ்பெஷல் கரம் மசாலா பொடி
ஷா ஜீரா – 50 கிராம்
பச்சை ஏலக்காய் – 50 கிராம்
கிராம்பு – 50 கிராம்
பட்டை – 50 கிராம்
ஸ்பெஷல் கரம் மசாலா பொடி செய்முறை:
மசாலா பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்த பிறகு அதனை ஒரு கடாயில் சேர்த்து குறைந்த தீயில் ட்ரை ரோஸ்ட் செய்து கொள்ளவும். பின்னர் அதனை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளலாம்.
பிற பொருட்கள்:
கிராம்பு – 5
நெய் – 300 கிராம் (200 கிராம் சமைக்க + 100 கிராம் கடைசியில் சேர்க்க)
ஷா ஜீரா – 30 கிராம்
நறுக்கிய புதினா இலைகள் – 3 தேக்கரண்டி
கருப்பு மிளகு – 10
நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – 3 தேக்கரண்டி
பொறித்த வெங்காயம் – 100 கிராம்
பச்சை ஏலக்காய் – 3
பட்டை – 1 இன்ச் அளவு
எலுமிச்சை சாறு – தேவைப்பட்டால்
செய்முறை விளக்கம்:
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும். கொடுக்கப்பட்டுள்ள முழு மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து அது பொரிந்து வரும் வரை காத்திருக்கவும். இப்பொழுது நாம் ஊறவைத்த ஆட்டுக்கால் மற்றும் கொழுப்பை சேர்க்கவும். இதனை 10 முதல் 12 நிமிடங்கள் வரை அதிக தீயில் வேக வைக்கவும்.
பின்னர் மட்டன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். மட்டனிலிருந்து தண்ணீர் வெளியே வர ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை குறைத்து மூடி போட்டு மட்டனை வேக வைக்கவும். மட்டன் வெந்ததும் அதில் உள்ள எலும்புகளை தனியாக வெளியே எடுக்கவும். இப்பொழுது நாம் முதலில் வேக வைத்த பருப்பு மற்றும் நட்ஸ் வகைகளில் உள்ள தண்ணீரை வடிகட்டி பருப்பையும் நட்ஸ் வகைகளையும் மட்டும் இந்த மட்டனோடு சேர்க்கவும்.
இப்போது நாம் நறுக்கி வைத்த கொத்தமல்லி, புதினா மற்றும் பொரித்த வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது அடுப்பை அணைத்து விடலாம். பொருட்கள் அனைத்தும் மீண்டும் ஒரு முறை நன்றாக கிளறி கடைசியாக நெய், கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு போன்ற பொருட்கள் சேர்த்து பரிமாறவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Eid Mubarak, Food recipes, Mutton recipes, Non Vegetarian, Ramzan