முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சஞ்சீவ் கபூரின் ஆரோக்கியமான ராஜ்கிரா பரோட்டா ரெசிபி.. முயற்சி செய்து பாருங்க!

சஞ்சீவ் கபூரின் ஆரோக்கியமான ராஜ்கிரா பரோட்டா ரெசிபி.. முயற்சி செய்து பாருங்க!

ராஜ்கிரா பரோட்டா

ராஜ்கிரா பரோட்டா

பைசாகி என்பது பொதுவாக வடக்கு மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். பஞ்சாப் மாநிலத்திலும் இந்த நாளை அறுவடை பருவத்தின் வருகையாக மக்கள் கொண்டாடுவார்கள். பைசாகி வழக்கமாக ஏப்ரல் 13 அல்லது 14 அன்று கொண்டாடப்படுகிறது.

 • Last Updated :
 • Tamil Nadu, India

பஞ்சாபில் உள்ளவர்கள் சர்சோ கா சாக், ஆலு பரோட்டா, கீர், பஞ்சாபி கதி, மஞ்சள் சாதம் போன்ற உணவுகளை விரும்பி உண்பார்கள். பிரபல சமையல் கலைஞரான சஞ்சீவ் கபூர் தனது சமையல் திறமையால் அனைவரையும் கவர்ந்த ஒருவராவார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் தனித்துவமான பரோட்டா ரெசிபியை அறிமுகப்படுத்தியுள்ளார். 

இது பைசாகி தினத்தன்று செய்வதற்கு சிறந்த ரெசிபி ஆகும். பைசாகி என்பது பொதுவாக வடக்கு மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா.பஞ்சாப் மாநிலத்திலும் இந்த நாளை அறுவடை பருவத்தின் வருகையாக மக்கள் கொண்டாடுவார்கள். பைசாகி அதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறை குறித்து விளக்கமாகப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

 • ராஜ்கிரா (தண்டுக்கீரை விதை) மாவு - 1 கப்
 • கோதுமை மாவு - 1/2 கப்
 • இஞ்சி-பச்சை மிளகாய் விழுது - 1/2 தேக்கரண்டி
 • சீரகம் - 1 தேக்கரண்டி
 • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
 • உப்பு - தேவைக்கேற்ப
 • எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
 • நெய் - 1 1/2 ஸ்பூன்
 • உருளைக்கிழங்கு (வேகவைத்து உரிக்கப்பட்டது) - 1
 • நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - 1 தேக்கரண்டி
 • எண்ணெய்
 • தயிர்

செய்முறை:

 • ஒரு பெரிய பாத்திரத்தில் ராஜ்கிரா மாவு, கோதுமை மாவு, இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, சீரகம், மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி நெய் ஆகியற்றை சேர்த்துக் கொள்ளவும்.
 • அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை எடுத்து நன்றாக மசித்து சேர்க்க வேண்டும்.இந்தக் கலவையை நன்கு கலந்து போதுமான தண்ணீர் ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ளவும். அடுத்து, நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழையைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், ½ தேக்கரண்டி நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
 • ஒரு பிளாஸ்டிக் கவர் எடுத்துக் கொண்டு அதில் எண்ணெய் தடவி வைக்க வேண்டும். மாவை பிரித்து மீடியம் அளவிலான உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு உருண்டையையும் அந்தக் கவரின் ஒரு பாதியில் வைத்து, மீதமுள்ள பாதியை மூடி, மெல்லிய பரோட்டாவாக உருட்டிக் கொள்ளவும்.
 • அடுப்பில் நான்-ஸ்டிக் தவாவை வைத்து, அது சூடான உடன், அதன் மீது ஒவ்வொரு பரோட்டாவையும் போட்டு, மிதமான சூட்டில் வைத்து, பிரவுன் ஆகும் வரை திருப்பி விட்டு வேக வைக்கவும். இருபுறமும் சிறிது நெய் தடவி, ஒவ்வொரு பக்கமும் 1 நிமிடம் ஆவது வைத்திருக்க வேண்டும்.
 • அவ்வளவு தான், பரோட்டா தயார், இதனை தயிர் தொட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
 • இந்த ஆரோக்கியமான உணவை இந்த வார இறுதியில் செய்து பார்த்து அசத்துங்கள்.
First published:

Tags: Food recipes, Paratha