முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கொத்தமல்லி வடை செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கொத்தமல்லி வடை செய்வது எப்படி?

கொத்தமல்லி வடை

கொத்தமல்லி வடை

Coriander Vada Recipe In Tamil | உங்கள் குழந்தைகளுக்கு கொத்தமல்லி வைத்து இப்படி வடை செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தேநீருக்கு ஏற்ற ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி செய்ய நினைப்பவரா நீங்க?. அப்போ இந்த கொத்தமல்லி வடையை ட்ரை பண்ணுங்க. உங்க வீட்டில் இருப்பவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி இலை - 2 கொத்து நறுக்கியது.

துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்.

கடலை மாவு - 1 கப்.

அரிசி மாவு - 1/4 கப்.

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்.

மல்லி தூள் - 1 ஸ்பூன்.

சீரக தூள் - 1 ஸ்பூன்.

பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்.

உப்பு - 1 ஸ்பூன்.

வெள்ளை எள்ளு - 1/4 ஸ்பூன்.

பச்சைமிளகாய் - 3 நறுக்கியது.

இஞ்சி - 1 துண்டு நறுக்கியது.

பூண்டு நறுக்கியது.

பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

மிக்ஸியில் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, துருவிய தேங்காய் சேர்த்து தண்ணீர் இஇல்லாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய கொத்தமல்லி இலை, கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள்,

பெருங்காயத்தூள், உப்பு, வெள்ளை எள்ளு ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு, அரைத்த மசாலாவையும் அதில் சேர்த்து தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.

Also Read | சத்து மாவு கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் 7 நம்பமுடியாத நன்மைகள்.. சம்மருக்கு ஏற்ற ட்ரிங்க்..!

பிசைந்த மாவின் மேல் எண்ணெய் தடவி வைக்கவும். இப்போது, கேக் டின்னில் எண்ணெய் தடவி மாவை வைத்து சமமாக பரப்பவும்.

அடுத்து மாவை 15 நிமிடம் இட்லி சட்டியில் ஆவியில் வேகவைக்கவும். பிறகு நன்கு ஆற விட்டு உங்களுக்கு விருப்பமான வடிவில் வெட்டவும்.

top videos

    இப்போது, ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, வெட்டிய மாவை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க சுவையான கொத்தமல்லி வடை தயார்.

    First published:

    Tags: Coriander, Food, Food recipes