முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடல் எடையை வெறும் 7 நாளில் குறைக்க உதவும் பூசணிக்காய் ஜூஸ்!

உடல் எடையை வெறும் 7 நாளில் குறைக்க உதவும் பூசணிக்காய் ஜூஸ்!

பூசணிக்காய் ஜூஸ்

பூசணிக்காய் ஜூஸ்

உடல் எடையை சட்டுனு குறைக்க நினைப்பவரா நீங்கள்?... அப்போ, இந்த பதிவு உங்களுக்குத்தான். வெறும் ஏழு நாளில் எடையை குறைக்க உதவும் பூசணிக்காய் ஜூஸ் செய்வது எப்படி என பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போதையை இளைஞர்கள் மத்தியில் நிலவும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. அனைவருக்கும் சரியான உடல் எடையுடன் சிக்குன்னு இருக்க ஆசைதான். ஆனால், அதற்கான முயற்சிகளை எடுக்கத்தான் நாம் முயற்சிப்பதில்லை. ஒருவேளை, நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு உதவும் அற்புதமான ஜூஸ் ஒன்றினை பூசணிக்காய், கேரட் மற்றும் ஆப்பிள் கொண்டு செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம். எடை குறைப்புக்கு மட்டும் அல்ல, சரும பொலிவுக்கு இது உதவியாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

சிறிய அளவிலான பூசணிக்காய் - 1 .

கேரட் - 3.

ஆப்பிள் பழம் - 1.

இஞ்சி - ஒரு சிறிய துண்டு.

இலவங்கப்பட்டை பொடி - 1/2 ஸ்பூன்.

ஐஸ் கட்டிகள் - 1 தேவையான அளவு.

நாட்டு சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் ஜூஸ் செய்ய எடுத்துக்கொண்ட சிறிய அளவிலான பூசணிக்காயினை தோல் நீக்கி சுத்தம் செய்யவும். பின்னர், இதில் இருக்கும் விதைகளை நீக்கி, காயினை மட்டும் சிறிய துண்டுகளாக வெட்டி தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

அதேப்போன்று கேரட்டினை தோல் நீக்கி தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இதை தொடர்ந்து இஞ்சியையும் தோல் நீக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும்.

அதேபோல, ஒரு முழு ஆப்பிள் பழத்தை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

Also Read | இரத்த ஓட்டத்தை சீராக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பீட்ரூட் ஜூஸ் செய்வது எப்படி?

தற்போது ஒரு மிக்ஸி ஜாரில் பூசணிக்காய், ஆப்பிள் மற்றும் கேரட் துண்டுகளை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். கடைசியாக ஐஸ் கட்டிகள் மற்றும் சர்க்கை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். குளிர்ச்சி வேண்டாம் என நினைப்பவர்கள் ஐஸ் கட்டிக்கு பதில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

பின்னர் இதனுடன் இஞ்சி துண்டுகளை இடித்து அதனுடன் சேர்த்துக்கொள்ளவும். இப்போது அதில் இலவங்கப்பட்டை பொடியையும் சேர்த்து ஒரு முறை அரைத்துக்கொள்ளவும்.

நன்கு அரைக்கப்பட்ட இந்த ஜூஸினை ஒரு வடிக்கட்டி பயன்படுத்தி, திப்பைகளை நீக்கி ஒரு குடுவையில் சேமித்து வைக்க சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ் ரெடி.

top videos

    ஒரு கிளாஸில் இந்த சாறை ஊற்றி, கேரட் துண்டுகளை வட்ட வடிவில் வெட்டி அழகுக்கு கிளாஸின் விளிம்பில் வைத்து அழகாக பரிமாறலாம். தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகளை இதன் மீது சேர்த்துக்கொள்ளலாம்.

    First published:

    Tags: Healthy juice, Pumpkin, Weight loss