முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முட்டை இல்லாமல் ஆம்லெட் போட முடியுமா..? இதிலும் புரோட்டீன் கிடைக்கும்.. இதோ ரெசிபி..!

முட்டை இல்லாமல் ஆம்லெட் போட முடியுமா..? இதிலும் புரோட்டீன் கிடைக்கும்.. இதோ ரெசிபி..!

வெஜ் ஆம்லெட்

வெஜ் ஆம்லெட்

பாசிப்பருப்பில் செய்யக்கூடிய இந்த உணவு ஆரோக்கியமான காலை அல்லது இரவு உணவாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆம்லெட் என்றாலே அது முட்டை தான். அது என்ன முட்டை இல்லாத வெஜ் ஆம்லெட் என தலைப்பை பார்த்த பலரும் யோசித்து இருப்பீர்கள். வழக்கமாக ஆம்லெட் என்றால் நம்ம ஊரில் சைடிஷ்ஷாக சாப்பிடுவோம். ரசம், சாம்பார், கார குழம்பு என மீல்ஸ்க்கு சூப்பரான சைடிஷ் என்றால் அது ஆம்லெட் தான். ஆனால் இந்த வெஜ் ஆம்லெட் என்பது வட இந்தியாவில் ஃபேமஸ், இதை அவர்கள் சாப்பாட்டுக்கு சைடிஷ்ஷாக வைத்து சாப்பிடமாட்டார்கள். காலை அல்லது இரவு நேர டிபன் அவர்களுக்கு இந்த வெஜ் ஆம்லெட் தான்.

பாசிப்பருப்பில் செய்யக்கூடிய இந்த உணவு ஆரோக்கியமான காலை அல்லது இரவு உணவாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு பதிலாக இப்படி ஒருமுறை செய்து கொடுங்கள். அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். டேஸ்ட் பிடித்தால் போதும் அது உள்ளூராக ரெசிபியாக இருந்தால் என்ன? வெளியூராக இருந்தால் என்ன? செஞ்சி சாப்பிட வேண்டியது தான். இந்த சுவையான வெஜ் ஆம்லெட் ரெசிபி சுபா சமையலறை என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு, பச்சை மிளகாய், உப்பு, வெங்காயம், கேரட், கொத்தமல்லி, குடை மிளகாய், சோடா உப்பு.

செய்முறை:

1. முதலில் பாசிப்பருப்பை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் பச்சை மிளகாய் சேர்த்து அடை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

2. பின்பு அதில் தேவையான அளவு உப்பு, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, குடை மிளகாய், துருவிய கேரட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

3, கடைசியாக அதில் சேட் மசாலா தூள், சோடா உப்பு சேர்த்து கலந்து கொண்டு பக்குவமாக அடை போல் சுட்டு எடுக்க வேண்டும்.

top videos

    4. அவ்வளவு தான் டேஸ்டியான வெஜ் ஆம்லெட் ரெடி.

    First published:

    Tags: Egg recipes, Omlet, Vegetarian Recipes