முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பலா இலையில் செய்யப்படும் இட்லி : தெலுங்கு மக்களின் பாரம்பரிய உணவு..!

பலா இலையில் செய்யப்படும் இட்லி : தெலுங்கு மக்களின் பாரம்பரிய உணவு..!

பலா இலையில் இட்லி

பலா இலையில் இட்லி

Jackfruit Leaves idli | தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் பாரம்பரிய முறையில் பலா இலைகளை பயன்படுத்தி செய்யப்படும் இட்லியானது மிகப் பெரும் அளவில் பிரபலமடைந்து வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் பாரம்பரிய முறையில் பலா இலைகளை பயன்படுத்தி செய்யப்படும் இட்லியானது மிகப் பெரும் அளவில் பிரபலமடைந்து வருகிறது. பொட்டிக்களு என அழைக்கப்படும் இந்த உணவு வகை ஹைதராபாத் மக்கள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

குக்கட்பள்ளியில் அமைந்திருக்கும் மஞ்சிராவிற்கு எதிர்ப்புறம் இருக்கும் உணவகத்தில் தான் இந்த பாரம்பரிய உணவு வகையானது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. முதன் முதலில் ஆந்திர மாநிலத்தில் பண்டைய காலங்களில் தயாரிக்கப்பட்டு வந்த உணவு வகையானது காலப்போக்கில் மறைந்து விட்டது. தற்போது மீண்டும் தங்களது பாரம்பரிய உணவு வகையை மீட்டெடுக்கும் முயற்சியில் தெலுங்கு மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பனாசா பட்டாலா வந்தகம் என அழைக்கப்படும் இந்த பொட்டிக்களு உணவு வகையானது ஆந்திராவின் வடக்கு பகுதியில் கடவுளுக்கு இடப்படும் படையலில் இடம்பெற்றுள்ளது. பலா இலைகளை ஒன்றாக தைத்து சிறிய கூடை போல மாற்றி பின்பு அது நம் வழக்கமாக இட்லி ஊற்ற பயன்படுத்தும் மாவை ஊற்றி நன்றாக வேக வைக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் இட்லியின் சுவையானது மிகவும் அற்புதமாக இருக்கும்.

பெட்டிக்களு - பலா இலையில் இட்லி

ஒரு முறை சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் வகையில் இது இருக்குமாம். இவ்வாறு தயாரிக்கப்படும் பொட்டிக்களு எனப்படும் இட்லியில் இஞ்சி கொண்டு தயாரிக்கப்பட்ட சட்னியையோ அல்லது தேங்காய் சட்னியையும் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும் என்று மக்கள் கூறுகின்றனர். மேலும் இதன் மூலம் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய கோளாறுகள் ஆகியவை ஏற்படும் வாய்ப்பையும் இது கணிசமாக குறப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

Also see... கம்பு இட்லி.. சர்க்கரை நோயாளிகளுக்கான காலை உணவு ரெசிபி...!

மேலும் குக்கட்பள்ளியில் அமைந்துள்ள அந்த உணவகத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சமையற்கலை நிபுணர் ஒருவர்தான் கடந்த 12 வருடங்களாக இந்த பொட்டிக்களு உணவை தயாரித்து வருகிறார். நமது நியூஸ் 18 குழுவினருடன் பேசிய அவர் கூறுகையில், தினசரி அமலாபுரம் பகுதியிலிருந்து பலா மரத்தின் இலைகள் கொண்டுவரப்பட்டு இந்த உணவு தயார் செய்யப்படுவதாக கூறுகிறார்.

4 துண்டு பொட்டிக்களு ரூ.30-க்கு விற்கப்படுகிறது. வழக்கமாக தயாரிக்கப்படும் இட்லியை விட இந்த இட்லி மிகவும் ஆரோக்கியமானது என்று அவர் கூறுகிறார். பலாமரத்தின் மருத்துவ குணங்கள் இட்லியில் சேர்ந்து நமக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது. இளமையான தோற்றத்தை தருவதுடன் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் குணப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also see... இன்று உலக இட்லி தினம்... சாஃப்டான இட்லி செய்ய சில டிப்ஸ்...

குக்கட்பள்ளியில் அமைந்துள்ள இந்த உணவகத்திற்கு இந்த பொட்டிக்களு உணவை ருசிப்பதற்காகவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் படை எடுத்து வருகின்றனர். மேலும் தங்களது பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியிலும் அவர்கள் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Food, Idli, Telangana