முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சுவையான, காரசாரமான உருளைக்கிழங்கு பட்டாணி ரெசிபி..!

சுவையான, காரசாரமான உருளைக்கிழங்கு பட்டாணி ரெசிபி..!

பட்டாணி உருளைக்கிழங்கு பொரியல்

பட்டாணி உருளைக்கிழங்கு பொரியல்

அன்றாடம் வீட்டில் இருக்கும் அடிப்படை மசாலாக்களை வைத்து மிக எளிமையாக இதனை தயாரிக்க முடிவதுடன், அருமையான சுவையையும் கொண்டுள்ளதால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு வகையாக இது இருந்து வருகிறது.

 • Last Updated :
 • Tamil Nadu, India

வீடுகளிலும், திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளிலும் பரிமாறப்படும் உருளை கிழங்கு பட்டாணி பொரியலை பற்றி தான் இப்பதிவில் பார்க்கவிருக்கிறோம். அன்றாடம் வீட்டில் இருக்கும் அடிப்படை மசாலாக்களை வைத்து மிக எளிமையாக இதனை தயாரிக்க முடிவதுடன், அருமையான சுவையையும் கொண்டுள்ளதால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு வகையாக இது இருந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை சாப்பிடலாம். இப்படிப்பட்ட சுவை மிகுந்த உருளைக்கிழங்கு பட்டாணி பொரியலை எளிதாக எவ்வாறு தயார் செய்வது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

 • எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்
 • கடுகு ஒரு டேபிள் ஸ்பூன்
 • உளுத்தம் ஒரு டேபிள் ஸ்பூன்
 • நறுக்கிய வெங்காயம் அரை கப்
 • பச்சை மிளகாய் ஒன்று
 • நறுக்கிய தக்காளி கால் கப்
 • கருவேப்பிலை தேவையான அளவு
 • சாம்பார் பொடி ஒரு டேபிள் ஸ்பூன்
 • மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
 • பெருங்காயம் அரை டீஸ்பூன்
 • தண்ணீர் அரை கப்
 • அவித்த உருளைக்கிழங்கு மூன்று
 • அரைக்கப்பட்ட பட்டாணி
 • உப்பு தேவையான அளவு
 • எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன்
 • கொத்தமல்லி தேவையான அளவு

செய்முறை:

 • கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் போற்றி நன்றாக சூடேற்றவும்.
 • இப்போது அதில் கடுகு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
 • உளுத்தம் பருப்பு பழுப்பு நிறத்திற்கு வந்ததும், அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து 30 நொடிகள் வதக்க வேண்டும்.
 • வெங்காயம் பொன்னிறத்திற்கு மாறி மிகவும் மென்மையாகும் வரை வதக்கவும்.
 • இப்போது அதனுடன் பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
 • இவற்றுடன் தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்
 • 30 நொடிகள் வரை வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
 • மசாலா சற்று கெட்டியான பதத்திற்கு வருமாறு தண்ணீரை சேர்க்க வேண்டும். அதிகளவு தண்ணீர் சேர்த்தால் மொத்த சுவையும் மாறி விடும்.
 • இந்த மசாலாவுடன் நாம் ஏற்கனவே அவித்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளை நறுக்கி, அவற்றை நன்றாக கலந்த பிறகு, இவற்றுடன் பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பின் தீயை குறைத்து மூன்று நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும்.
 • Also Read | உருளைக்கிழங்கை இப்படி ஸ்டோர் பண்ணி வைங்க... நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷா இருக்கும்..!

  கடைசியாக அதனுடன் கொத்தமல்லி இலைகள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். அவ்வளவுதான் இப்போது அடுப்பை அணைத்து தேவையான அளவு எலுமிச்சை சாற்றை அதன் மீது பிழிந்து அனைவருக்கும் பரிமாறலாம். சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி பொறியல் தயார்.

First published:

Tags: Green Peas, Potato recipes