பூண்டு சட்னி.. இந்த பெயரை கேட்டாலே குழந்தைகள் அலறி அடித்து ஓடிவிடுவார்கள். சாதாரணமாக வீட்டில் வைக்கும் குழம்பில் பூண்டு சேர்த்தால் கூட குழந்தைகள் அதை தட்டில் ஒதுக்கி விடுவார்கள். அவர்களை பூண்டு சட்னி சாப்பிட வைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் அதை பக்குவமாய் பூண்டு வாசனையே தெரியாமல் செய்து கொடுத்தால் சில குழந்தைகள் சாப்பிட்ட வாய்ப்புண்டு. அதுமட்டுமில்லை அது உடலுக்கு நல்லதும் கூட. உணவில் பூண்டு சேர்ப்பது ஜீரணத்திற்கு மட்டுமில்லை எல்லா உணவு சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும்.
இப்போது இந்த பதிவில் பூண்டு சட்னி செய்வது குறித்து பார்க்கலாம். இது நெய் தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். அதுமட்டுமில்லை இந்த சட்னியை கைப்படாமல் பக்குவமாய் செய்தால் 4 நாட்களுக்கு கெட்டு போகாது. ஆனால் அதை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இதுமட்டுமில்லை இரவு தங்கும் எந்த சட்னியையும் குழந்தைகளுக்கு எப்போதுமே கொடுக்காதீர்கள். இந்த ரெசிபி வீடிபோ பிரபல யூடியூப் குக்கிங் சேனலான அபூர்வாஸ் நளபகம் என்ற சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
பூண்டு, தக்காளி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு, கடுகு.
செய்முறை:
1. முதலில் கடாயில் எண்ணெய் ஊறி அதில் காரத்திற்கு தேவையான அளவு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பின்பு, அதே கடாயில் 1 கப் அளவு பூண்டு சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
3. இப்போது அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
4. அடுத்தது, மிக்ஸியில் வறுத்த காய்ந்த மிளகாய், வதக்கி எடுத்த பூண்டு , தக்காளி சேர்த்து அரைக்க வேண்டும்.
5. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை அதில் கொட்ட வேண்டும்.
6. பச்சை வாசனை போகும் வரை எண்ணெய்யில் சட்னியை வதக்க வேண்டும்.
6. எண்ணெய் தனியாக பிரிந்து வந்த உடனே இறக்கினால் போதும், சுவையான அட்டகாசமான பூண்டு சட்னி தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chutney, Chutney Recipe in Tamil, Garlic