முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு செய்ய ரெசிபி...!

பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு செய்ய ரெசிபி...!

பொன்னாங்கனி கீரை கூட்டு

பொன்னாங்கனி கீரை கூட்டு

Ponnaganni Keerai | கோடைக்காலத்தில் இந்த பொண்ணாங்கண்ணி கீரையை சாப்பிட்டால் உடல் உஷ்ணமாகமல் இருக்கும். கண்கள் குளுமையுடன் இருக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுவது இந்த பொன்னாங்காணி கீரைதான். கீரை வகைகளை நாம் வாரத்தில் ஒரு முறையாவதும், உணவில் சேர்த்துக்கொள்ளவது நல்லது. அதிக வெயிலில் வேலை செய்வது, கணினியில் அமர்ந்து வேலை செய்பவர்கள், சரியான தூக்கம் இல்லாதவர்களுக் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பொண்ணாங்கண்ணி கீரையை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். 

தேவையான பொருட்கள்:

பொன்னாங்காணி கீரை -1 கட்

பாசிப்பருப்பு - ½ கப்

மஞ்சள் தூள் தேவையான அளவு

காய்ந்த மிளகாய் - 5

தனியா - ½ டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டேபில் ஸ்பூன்

துவரம் - 2 டேபில் ஸ்பூன்

தக்காளி- 1

வெங்காயம் - 6 சின்

பூண்டு - 3 பல்

தேங்காய்த்துருவல் - ½ கப்

நல்எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் கீரையை நன்கு கழுவி காம்புகளை ஆய்ந்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

2. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் துருவல், தனியா, காய்ந்தமிளகாய், சீரகம், தேங்காய் பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி, எல்லாவற்றையும் லேசாக வறுத்து மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

3. பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், சேர்த்து கொதிக்க ஆரமித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து அதில் கீரை, உப்பு சேர்த்து முக்கால் பதம் வரை வேகவைக்க வேண்டும்.

4. கீரை வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும், பிறகு கூட்டு கெட்டியானதும் இறக்கி விடவும்.

5. பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நல்எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், கடுகு போட்டு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து கீரை கூட்டில் ஊற்றி நன்றாக கலந்து விடவும். இப்பொழுது சுவையான பொன்னாங்காணி கீரை கூட்டு ரெடி.

First published: