முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடல் எடையை குறைக்க உதவும் போஹா… 10 நிமிடத்தில் ரெடி செய்வது எப்படி?

உடல் எடையை குறைக்க உதவும் போஹா… 10 நிமிடத்தில் ரெடி செய்வது எப்படி?

வெறும் 10 நிமிடம் இருந்தா போதும் சுவையான போஹா ரெடி!

வெறும் 10 நிமிடம் இருந்தா போதும் சுவையான போஹா ரெடி!

காலையில் சமைக்க நேரம் இல்லையா?... கவலை வேண்டாம். வெறும் 10 நிமிடம் இருந்தா போதும் சுவையான போஹா தயார் செய்யலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போதைய இளம் வயதினர் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் உடல் எடை அதிகரிப்பு. அதை குறைக்க நாம் படும் பாடு நமக்கு மட்டுமே தெரியும். உடல் எடை குறைப்புக்காக நீங்கள் டயட்டில் இருப்பவரா?. காலை உணவுக்கு ஏற்ற ஒரு ரெசிபி பற்றி கூறுகிறோம்.

உடல் எடை குறைப்புக்கு உதவும் அவல், வேர்க்கடலை, எலுமிச்சை வைத்து போஹா ரெசிபி எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அவல் - 1 கப்.

வேர்க்கடலை - 1/2 கப்.

வெங்காயம் - 1.

தக்காளி - 1.

பச்சை மிளகாய் - 2.

கறிவேப்பிலை - 1 கொத்து.

எலுமிச்சை - 1.

சர்க்கரை - 1 ஸ்பூன்.

கடுகு - கால் ஸ்பூன்.

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

போஹா செய்வதற்கு முன்னதாக, அவலை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து 2 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி , அவலை மட்டும் தனியே உலர விடுங்கள்.

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்க்காமல் வேர்க்கடலையினை மட்டும் வறுத்துக்கொள்ளவும். பின்னர் இந்த வறுத்த கடலையின் தோல் நீக்கி தனியே எடுத்து வைத்துகொள்ளவும்.

தற்போது அவல் செய்வதற்கு, மற்றொரு கடாயினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

Also Read | கத்தரிக்காய் வைத்து ஒரு சூப்பரான கர்நாடகா ஸ்டைல் லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்யலாமா..?

தொடர்ந்து, பெரிய வெங்காயம் ஒன்றை பொடியாக நறுக்கி, கடாயில் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கும் அதே நேரத்தில் பச்சை மிளகாய் 2-னை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வேக விடவும். தொடர்ந்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் பொடியாக அரைத்த சர்க்கரையினை சேர்த்து வதக்கவும்.

இந்த சேர்மம் நன்கு வதங்கி, மணம் வரும் நிலையில் இதனுடன் வடித்து வைத்த போஹா சேர்த்து கிளறிவிடவும். தொடர்ந்து எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு முறை கிளறி, அடுப்பை அணைத்துவிட சுவையான போஹா ரெடி.

top videos

    சுவைமிக்க இந்த போஹாவினை வேர்க்கடலை சட்னி அல்லது பொட்டுக்கடலை சட்னியுடன் பரிமாறலாம். போஹாவின் சுவையை அதிகரிக்க, இதன் மீது தேங்காய் துருவல் சற்று சேர்த்துக்கொள்ளலாம்.

    First published:

    Tags: Food, Food recipes, Poha Recipes