பாகற்காய் பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு, சுக்கா என டேஸ்டியான முறையில் சமைத்து கொடுத்தாலும் கசக்கும் வேண்டாம் என்று பொதுவாக கூறிவிடுகின்றனர். அதனால் பாகற்காயை செய்யாமல் மட்டும் இருந்து விடாதீர்கள். அவர்களை சாப்பிட்ட வைக்க வேற எதாவது புதுமையான முறையை கையாளுங்கள். அந்த வகையில் இந்த பதிவில் கொஞ்சம் கூட கசப்பே தெரியாமல் பாகற்காயை எப்படி சமைப்பது என்று பார்க்கலாம். பாகற்காய் சுக்கா ரெசிபி. இந்த சுக்கா செய்யும் போது அதில் எப்படி கசப்பு எடுப்பது என்றும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த விடீயோ பிரபல யூடியூப் சமையல் சேனலான சிம்பிளி சமையலில் வெளியிடப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
பாகற்காய், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, எண்ணெய், காஷ்மீர் மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, வெல்லம்.
செய்முறை:
1. முதலில் பாகற்காயை பொடியாக நறுக்கிய அதை உப்பு கலந்த தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற வைத்து பிழிந்து எடுக்கும் போது அதில் இருக்கும் கசப்பு, சமைத்த பின்பு துளி கூட தெரியாது.
2. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும் .
3., பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பாகற்காய் உப்பு சேர்த்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்
4. பாகற்காய் வெந்து தோல் சுருங்கிய பின்பு அதில் காஷ்மீர் மிளகாய் தூள், குழம்பு தூள், மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் எண்ணெய்யில் வறுக்க எடுக்க வேண்டும்.
5. பின்பு வெல்லம் பொடியை சேர்க்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 20 நிமிடம் மூடி போட்டு வறுத்தால் எண்ணெய் தனியாக பிரிந்து வந்துவிடும்.
6. அவ்வளவுதான் இப்போது சுவையான கசப்பு தெரியாத பாகற்காய் சுக்கா தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bitter gourd