முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பனீர் நகட்ஸ் செய்து அசத்துங்க..!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பனீர் நகட்ஸ் செய்து அசத்துங்க..!

நொடியில் தயார் ஆகும் பன்னீர் பக்கோடா - இதோ ரெசிபி!

நொடியில் தயார் ஆகும் பன்னீர் பக்கோடா - இதோ ரெசிபி!

evening snacks for kids | உங்க வீட்டு குழந்தைகளுக்கு இதை ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக செய்து கொடுங்க. ரொம்ப சந்தோசமா சாப்பிடுவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பன்னீர், காளான் ஆகியவை நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த சைவ உணவுகளில் ஒன்று. அசைவ உணவுக்கு நிகரான சுவையும், சத்துக்களும் இதில் உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு கோடைவிடுமுறை துவங்கி விட்டது. உங்கள் குழந்தைக்கு வித விதமான உணவுகளை சமைத்து கொடுக்க விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

மாலைநேர டீ-க்கு ஏற்ற சுவையான பக்கோடா ஒன்றினை ‘பன்னீர்’ பயன்படுத்தி மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வது என இந்த பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் :

பன்னீர் - 200 கிராம்.

மைதா - 1/4 கப்.

மிகளாய் தூள் - 1 ஸ்பூன்.

எலுமிச்சை பழம் - 1 ஸ்பூன்.

சோள மாவு - 1 ஸ்பூன்.

பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்.

மிளகு தூள் - 1/4 ஸ்பூன்.

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்.

பால், உப்பு, எண்ணெய் - போதுமான அளவு.

செய்முறை :

முதலில், ரெசிபி செய்ய எடுத்துக்கொண்ட மைதா மற்றும் சோள மாவினை நன்கு சலித்து தூசி நீக்கி சுத்தம் செய்து தனியே எடுத்து வைக்கவும்.

இதை தொடர்ந்து எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தினை இரண்டாக வெட்டி, சாறு புழிந்து தனியே எடுத்து வைக்கவும்.

இதற்கிடையில், எடுத்துக்கொண்ட பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி பின், கொதிக்கும் தண்ணீரில் 2 நிமிடங்களுக்கு முக்கி, தனியே வடிகட்டி எடுத்து வைக்கவும்.

Also Read | ஊட்டச்சத்து நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு சூப் செய்வது எப்படி தெரியுமா?

தற்போது ஒரு மிக்ஸிங் கோப்பை ஒன்றை எடுத்து அதில் சலித்த மாவுடன், மிகளாய் தூள், பேக்கிங் சோடா, மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.

இறுதியாக தேவையான அளவு பால் மற்றும் உப்பு சேர்த்து மாவை பக்கோடா பதத்திற்கு கலக்கவும். இப்போது, பக்கோடா மாவு தயார்.

இப்போது, பன்னீர் பக்கோடா சுட்டு எடுக்க, ஒரு கடாயில் போதுமான அளவு எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கவும்.

top videos

    எண்ணெய் நன்கு சூடான நிலையில், பக்கோடா மாவில் பன்னீரை முக்கி எடுத்து எண்ணெயில் இட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க சுவையான பன்னீர் பக்கோடா ரெடி. இதை ஈவினிங் நேர டீ-யுடன் குழந்தைகளுக்கு சேர்த்து வழங்கலாம்.

    First published:

    Tags: Food recipes, Paneer recipes