முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சப்பாத்திக்கு ஏற்ற ஒரு சூப்பரான கடாய் முட்டை மசாலா செய்யலாமா?

சப்பாத்திக்கு ஏற்ற ஒரு சூப்பரான கடாய் முட்டை மசாலா செய்யலாமா?

காரசாரமான கடாய் முட்டை மசாலா செய்முறை!

காரசாரமான கடாய் முட்டை மசாலா செய்முறை!

Egg Masala Curry Recipe : இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து வகையான உணவுக்கும் ஏற்ற வட இந்தியா ஸ்டைல் காரசாரமான கடாய் முட்டை மசாலா செய்வது எப்படி என பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

புரதத்தின் அற்புதமான ஆதாரமாக முட்டை உள்ளது. எனவே தான் தினசரி உணவில் முட்டை சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. புட்டு, ஊத்தப்பம், தோசை, இட்லி, சப்பாத்தி என அனைத்து உணவுகளுக்கு ஏற்ற கடாய் முட்டை மசாலா எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டை - 4.

வெங்காயம் - 1.

கொடை மிளகாய் - 1.

தக்காளி - 3.

இஞ்சி - பூண்டு விழுது - 1 ஸ்பூன்.

ஏலக்காய் - 2.

கிராம்பு - 2.

பிரியாணி இலை - 1.

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.

கொத்தமல்லி பொடி - 1 ஸ்பூன்.

உப்பு - தேவையான அளவு.

சமையல் எண்ணெய் - 2 ஸ்பூன்.

வெண்ணெய் - 1 ஸ்பூன்.

கொத்தமல்லி தழைகள் - 1 கொத்து.

செய்முறை :

கடாய் முட்டை மசாலா செய்ய, முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து அவித்து, ஓடை நீக்கி தனியே எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும். அதேநேரம் கடாய் மசாலாவுக்கு தேவையான வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கி தயார் படுத்திக்கொள்ளவும்.

தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் அவித்த முட்டைகளை இரண்டாக வெட்டி சேர்த்து பொரித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் இதே கடாயில் எண்ணெய் கொஞ்சம் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், கொடை மிளகாய், பிரியாணி இலைகள், கிராம்பு, ஏலக்காய், இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இதில் கொத்தமல்லி பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து நறுக்கிய தக்காளி, உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

Also Read | சத்தான தினை அரிசியில் தக்காளி சாதம்... இதோ ரெசிபி..!

கடாயில் மசாலா நன்கு கொதித்ததும் இதில் அவித்து - எண்ணெயில் பொரித்து வைத்த முட்டையினை சேர்த்து நன்கு கிளறிவிடவும். மசாலா நன்றாக முட்டையில் சேரும் வரை மிதமான சூட்டில் இந்த சேர்மத்தை கொதிக்க விடவும்.

top videos

    மாசாலா வாசம் மாறும் நிலையில், கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவிட முட்டை மசாலா ரெடி. இறுதியாக இதன் மீது வெண்ணெய் சேர்த்து ருசியாக பரிமாற வேண்டியது தான்.

    First published:

    Tags: Egg, Egg recipes, Food, Food recipes