முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மட்டன் உப்பு கறி செஞ்சுருக்கீங்களா? இதை ட்ரை பண்ணுங்கள்...!

மட்டன் உப்பு கறி செஞ்சுருக்கீங்களா? இதை ட்ரை பண்ணுங்கள்...!

மட்டன் உப்புக் கறி

மட்டன் உப்புக் கறி

Mutton Recipe | மீந்துபோன பிரியாணியில் பீஸ் அதிகமாக உள்ளதா? கவலைய விடுங்க... இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க...

  • Last Updated :

சம்மரில் மட்டன் சாப்பிடுவது உடல் வெப்பத்தைக் குறைக்கும். எனவே பலரும் இந்த வெயில் காலத்தில் மட்டனை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். நீங்கள் மட்டனை வித்தியாசமாக சமைத்து சாப்பிட நினைத்தால், உப்பு கறி சமைத்து சாப்பிடுங்கள். ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத மட்டன் - 300 கிராம்

சின்ன வெங்காயம் - 20

பூண்டு - 20 பற்கள்

இஞ்சி - 1 இன்ச்

குண்டு வரமிளகாய் - 10

தக்காளி - 1

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

1. முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பாதி மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின் அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து, அதோடு, தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி பிரட்டி விட வேண்டும்.

2. மட்டனின் நிறம் சற்று மாற தொடங்கும் போது, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

Also See... காடை முட்டை குழம்பு செய்வது எப்படி? இதோ ரெசிபி!

 3. பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீதமுள்ள வரமிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வதக்கி, பின் எஞ்சிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

4. பிறகு குக்கரை திறந்து, அதனை வாணலியில் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை பிரட்டி இறக்கினால், சுவையான உப்பு கறி ரெடி.

top videos

    5. இந்த உப்பு கறியை மீந்துபோன பிரியாணியில் அதிகமாக மட்டன் பீஸ் இருந்தால் அதனை எடுத்தும் செய்யலாம் நல்ல ருசியாக இருக்கும். அப்படியே அந்த பிரியாணியையும் மிக்ஸியில் அரைத்து வெங்காயம் சேர்த்து பக்கோடா போல எண்னெயில் பொறித்து எடுக்கலாம்...

    First published:

    Tags: Mutton recipes