முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நாவூற வைக்கும் ஈரல் வதக்கல்... ரெசிபி இதோ.!

நாவூற வைக்கும் ஈரல் வதக்கல்... ரெசிபி இதோ.!

ஈரல் வதக்கல்

ஈரல் வதக்கல்

Mutton liver Recipe | மட்டன் ஈரலில் விட்டமின் பி12, விட்டமின் ஏ, காப்பர் இப்படி பல வகையான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதை வாரத்தில் இரண்டு நாட்கள் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

மட்டன் என்றாலே அசைவ பிரியர்கள் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அதில் உள்ள ஈரலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த ஈரலை வதக்கல் ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

 • ஈரல் - கால் கிலோ
 • சீரகம் - ஒரு தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - சிறிதளவு
 • மிளகு - இரண்டு தேக்கரண்டி
 • சின்ன வெங்காயம் - 100 கிராம்
 • நல்லெண்ணெய் - மூன்று தேக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இரும்புச் சட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்தவுடன் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி உடன் பொடியாக நறுக்கி வைத்து இருக்கும் ஈரல், மிளகு, சீரகத் தூள், உப்பு, மஞ்சள் தூள் ஆகிய அனைத்தையும் போட்டு நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். பிறகு மீண்டும் இரண்டு தரம் நன்கு கிளறி ஈரலின் நிறம் மாறியதும் உடனடியாக இறக்கி வைக்கவும். இதோ சுவையான ஈரோடு ஈரல் வதக்கல் தயார்.

top videos

  குறிப்பு: பொதுவாக ஈரல் சீக்கிரம் வெந்து விடும் என்பதால் அதிக கவனம் தேவை.

  First published:

  Tags: Goat Liver, Non Vegetarian, Recipe