முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / புதினா சட்னி பிரியரா நீங்கள்..? குடல் நலனுக்கு மிகவும் நல்லது.. ரெசிபி இதோ..!

புதினா சட்னி பிரியரா நீங்கள்..? குடல் நலனுக்கு மிகவும் நல்லது.. ரெசிபி இதோ..!

புதினா சட்னி

புதினா சட்னி

புதினா இலையை வெறுமனே கையில் எடுத்தாலே அதன் வாசம் நம் மூக்கு வரையிலும் ஏறும். அத்தகைய புதினாவை தற்போதைய கோடை காலத்தில் நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் அதன் மூலம் கிடைக்கின்ற பலன்கள் ஏராளம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியர்களின் சமையலில் சட்னி வகைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. கொஞ்சம் கெட்டியாக அரைத்து விட்டால் துவையல். அதுவே கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்தால் சட்னி. இரண்டுக்கும் பெரிய அளவுக்கு வேறுபாடு கிடையாது. அதே சமயம், பழங்காலத்தில் நம் முன்னோர்கள் சாப்பிட்ட சிறு தானிய உணவுகள் தொடங்கி, தற்போது நாம் சாப்பிடும் இட்லி, தோசை, அரிசி சாப்பாடு வரையில் எல்லாவற்றிலும் தொட்டுக் கொள்ள துணையிருப்பது இந்த சட்னி, துவையல் வகைதான்.

சட்னியில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று பல வகை உண்டு என்றாலும் தனித்த மனமும், சுவையும் கொண்ட புதினா சட்னி எல்லோருக்கும் பிடித்தமானது. புதினா இலையை வெறுமனே கையில் எடுத்தாலே அதன் வாசம் நம் மூக்கு வரையிலும் ஏறும். அத்தகைய புதினாவை தற்போதைய கோடை காலத்தில் நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் அதன் மூலம் கிடைக்கின்ற பலன்கள் ஏராளம்.

நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் பண்பு புதினாவில் உள்ளது. இது மட்டுமல்லாமல் செரிமானத் திறனை மேம்படுத்தும் மற்றும் அசிடிட்டியை குறைத்து குடல் நலனை மேம்படுத்தும்.

புதினாவில் கிடைக்கும் சத்துக்கள்:

நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற சத்துக்கள் புதினாவில் மிகுதியாக உள்ளன. இயற்கையாகவே ஆண்டி செப்டிக் மற்றும் ஆண்டி பாக்டீரியா பண்புகளை கொண்டது. இதனால் நம் குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை புதினா ஊக்குவிக்கும். இது மட்டுமல்லாமல் புதினா சட்னியில் நாம் சேர்த்துக் கொள்ளும் பிற மசாலா பொருட்கள் மற்றும் மூலிகைகள் அனைத்துமே செரிமானத்தை மேம்படுத்தி, மெடபாலிச நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்.

Also Read | பருப்பில்லாமல் தக்காளி சாம்பார்... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... நீங்களும் செஞ்சு பாருங்க..!

புதினா பச்சை சட்னி:

ஒரு கையளவு புதினா இலைகளை அலசி, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். இந்த புதினாவுடன், 3 பூண்டு பல், ஒரு சிட்டிகை அளவு இஞ்சி மற்றும் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். பின்னர் சாட் மசாலா, மிளகுத்தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து மீண்டும் அரைக்கவும். கெட்டியான பதத்தில் உள்ள இந்த பச்சையான சட்னியை பூரி, கிரில் வகைகள் போன்றவற்றுக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.

புதினா கெட்டி துவையல்:

உளுந்தம் பருப்பு இரண்டு டீ ஸ்பூன் அளவு, எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, பூண்டு பல் - 4, மிளகாய் வத்தல் - 4, தக்காளி நறுக்கியது ஒரு கப் அளவு, பெரிய வெங்காயம் நறுக்கியது கால் கப் அளவு, சின்ன வெங்காயம் நறுக்கியது அரை கப் அளவு, உப்பு தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி அளவு புதினா இலையை அலசி வைத்துக் கொள்ளவும்.

  • முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு உளுந்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு பொறிக்கவும். பின்னர் மிளகாய் வத்தல் சேர்த்து, நன்றாக சிவக்கும் வரை பொறிக்கவும்.
  • இப்போது பூண்டு பல் சேர்த்து வதக்கவும். பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து செந்நிறமாக மாறும் வரை வதக்கவும்.
  • பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து அரை வேக்காடு வரை வதக்கிய நிலையில், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • இறுதியாக புதினா சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் வதக்கிய பின் இறக்கி விடவும்.
  • இந்த மசாலா கலவை ஆறிய பிறகு, மிக்ஸியில் கெட்டியாக அரைத்து எடுத்தால் சுவையான, மனம் மிகுந்த புதினா துவையல் தயார் ஆகியிருக்கும்.
First published:

Tags: Chutney, Mint, Mint Chutney