முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாங்காய் சாதம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க..

மாங்காய் சாதம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க..

மாங்காய் சாதம்

மாங்காய் சாதம்

Mango rice | மாங்காய் சாதத்தை மிக சுவையாக செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடை சீசனில் மாங்காய் சாதம் செய்யாமல் இருப்பது எப்படி? இந்த ரெசிபி எவ்வளவு எளிமையானது தெரியுமா? வெறும் 10 நிமிடங்களுக்குள் செய்திடலாம். ஒரு முறை இந்த ரெசிபியை செய்தால் மீண்டும் மீண்டும் சாப்பிட விரும்புவீர்கள். எனவே இந்த மாங்காய் சாதத்தை எப்படி செய்வது என்று இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்,

துருவிய மாங்காய் - 1 கப்

தேங்காய்த் துருவல் - 1/2 கப்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை -1 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

உப்பு - தேவைக்கு ஏற்ப

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

1.முதலில் மாங்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். அரிசியை கழுவி தண்ணீர் சேர்த்து சாதமாக, உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.

2. பின்பு அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து ஆற விடவும்.

3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும். சிவந்து வந்ததும் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

4. இப்போது மாங்காய்த் துருவல், தேங்காய்த் துருவலை சேர்த்து லேசாக வதக்கி உப்பு சேர்த்து இறக்கவும். இத்துடன் சாதம், வேர்க்கடலையை நன்றாக சேர்த்து கலக்க வேண்டும். இப்போது மாங்காய் சாதம் ரெடி.

top videos

    குறிப்பு: சாதம் மஞ்சள் நிறத்தில் வேண்டுமென்றால் வதக்கும் பொழுது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். மாங்காயை குழைய வதக்கக் கூடாது.

    First published:

    Tags: Food recipes, Mango