மக்கானா விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த விதைகள் அனைத்து சூப்பர் மார்கெட் கடைகளிலும் கிடைக்கும். இந்த மக்கானாவைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை செய்யலாம். அதில் மக்கானா கிரேவி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். இது சப்பாத்தி, பூரி, புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மக்கானா (தாமரை விதைகள்) - 2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 3/4 கப்
உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
முந்திரி - 5
வரமிளகாய் - 2
மிளகு - 1 /4 டீஸ்பூன்
சோம்பு - 1 /2 டீஸ்பூன்
செய்முறை:
1. முதலில் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கி வைக்கவும்
2. இவை ஆறியதும் அத்துடன் முந்திரி, வரமிளகாய், சோம்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
3. இப்போது ஒரு பேனில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், மக்கானாவைப் போட்டு மொறுமொறுவென்று மாறும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
4.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்த பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து கிளற வேண்டும்.
5. பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
6. எண்ணெய் தனியாக பிரியும் வரை குறைந்தது 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து அதில் வறுத்த மக்கானாவை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து, பின் பிரஷ் க்ரீம் சேர்க்க வேண்டும்.
7. இப்போது இதன் மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மக்கானா கிரேவி ரெடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.