முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நூக்கல் பொரியலை இப்படி செய்து சாப்பிடுங்க... சுவையாக இருக்கும்..!

நூக்கல் பொரியலை இப்படி செய்து சாப்பிடுங்க... சுவையாக இருக்கும்..!

நூக்கல் பொரியல்

நூக்கல் பொரியல்

Nookal |நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகளை அடிக்கடி உட்கொள்வதால் உடலின் உஷ்ண தன்மை குறையும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரும்பாலான காய்கறிகள் நாம் சமைத்து சாப்பிடுவதே இல்லை.  பலரும் நாட்டு காய்கறிகளை விரும்பி தேர்ந்தெடுத்து சமைத்து பார்ப்பதில்லை. அந்த வகையில் இந்த நூக்கல் காய்கறியும் ஒன்று. இதனை எப்படி பொரியல் செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

நூக்கல் – 2

கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,

வெங்காயம் – 1

தேங்காய் துருவல் – 1/2 கப்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு – தேவையான அளவிற்கு

செய்முறை:

1. முதலில் நூக்கல் தோல் நீக்கி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். முள்ளங்கி போன்று நூக்கல் மேல் வளர்ந்திருக்கும் இலைகளை தூக்கி எறிய வேண்டாம். அதைப் பொரியல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

2. பின்னர் வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளிக்க வேண்டும்.

3. தாளிப்பதற்கு முறையே கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை போட்டு தாளித்தம் செய்து கொள்ளவும்.

4. அதன் பின் வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள நூக்கலை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கி மூடி வைத்து விடவும்.

5. அந்த சூட்டிலேயே நூக்கல் வெந்து வரும். 2 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் நூக்கல் வெந்து தண்ணீர் வற்றி இருக்கும். அந்த சமயத்தில் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து  மல்லித்தழை தூவி இறக்கினால் நூக்கல் பொரியல் ரெடி.

6. இதில் சேர்க்கப்படும் மஞ்சள் பொடி தேவையில்லை என்றால் சேர்க்க வேண்டாம்.

First published:

Tags: Vegetable