முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆண்டுக்கு 15 நாள் மட்டுமே கிடைக்கும் கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற இந்த உணவை ருசித்திருக்கிறீர்களா?

ஆண்டுக்கு 15 நாள் மட்டுமே கிடைக்கும் கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற இந்த உணவை ருசித்திருக்கிறீர்களா?

Bijapur Chivda

Bijapur Chivda

Karnataka Special Foods | மற்ற எல்லா கோயில் திருவிழாக்களை போலவே ஸ்ரீ சரண பசவேஸ்வர ஜாத்ரா மஹோத்ஸவ் திருவிழாவிலும் பல ஈர்க்கும் விஷயங்கள் உள்ளன. இதில் முக்கியமான ஒன்று சுவை மிகுந்த உணவான Bijapur Chivda.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்று குல்பர்கா (Gulbarga) என்றழைக்கப்படும் கலபுர்கி (Kalaburagi). ஒவ்வொரு ஆண்டும் Kalaburagi நகரத்தில் உள்ள சரண பசவேஸ்வரா கோயிலில் (Sharana Basaveshwara Temple)  ஜாத்ரா மஹோத்ஸவ்  திருவிழா நடைபெறுகிறது.

இந்த திருவிழாவில் பங்கேற்க இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் கூடுவதால் கோவில் வளாகம் மற்றும் Kalaburagi-யில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முக்கிய மத போதகரும், தத்துவஞானியாக இருந்த,  லிங்காயத் துறவியான ஸ்ரீ சரண பசவேஸ்வரருக்காக (Shri Sharana Basaveshwara) இந்த கோவில் பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் சரண பசவேஸ்வரரின் சமாதி கர்ப்பகுடி என்று அழைக்கப்படும் மையத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் அருகே ஒரு ஏரியும் உள்ளது, இது ஏராளமான பக்தர்களையும் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கிறது. மற்ற எல்லா கோயில் திருவிழாக்களை போலவே ஸ்ரீ சரண பசவேஸ்வர ஜாத்ரா மஹோத்ஸவ் திருவிழாவிலும் பல ஈர்க்கும் விஷயங்கள் உள்ளன. இதில் முக்கியமான ஒன்று சுவை மிகுந்த உணவான Bijapur Chivda. இந்த டிஷ் போஹா போன்றே சுவையானது மற்றும் நீங்கள் ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.

மேலும் படிக்க :  மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே.. புதுச்சேரியில் இனிமையான குரலில் பாடி அசத்தும் திருநங்கை கோபிகா..

இந்த டிஷ் உள்ளூர் மக்கள் மற்றும் திருவிழாவிற்கு வரும் வெளியூர் பக்தர்கள் மத்தியில் பிரபலமாக இருக்க காரணம் ஆண்டுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே இந்த ஸ்பெஷல் சிவ்டா (Chivda) கிடைக்கும் என்பதே. எனவே சரண பசவேஸ்வரா கோயிலின் வருடாந்திர திருவிழாவின் போது இந்த சுவையான டிஷ்ஷிற்கு அதிக டிமாண்ட் காணப்படுகிறது. பொரி, உப்பு தூள், வேர்க்கடலை, மசாலா, சமையல் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை உள்ளிட்ட பல பொருட்களை கொண்டு Chivda தயாரிக்கப்படுகிறது. திருவிழாவின் போது போடப்படும் பல ஸ்டால்களில் தினமும் சுவையான Chivda தயாரிக்கப்படுகிறது. இந்த Chivda விற்பனையாளர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சரண பசவேஸ்வர கோயில் திருவிழாவிற்கு வருவதை வழக்கமாக வைத்து உள்ளனர்.

இந்த புகழ்பெற்ற சுவையான டிஷ்ஷாக இருக்கும் சிவ்டாவின் 250 கிராம் விலை ரூ.100 ஆகும். 15 நாட்கள் மட்டுமே இந்த டிஷ் அங்கு கிடைக்கும் என்பதால் 15 நாட்களுமே தங்களுக்கு வியாபாரம் சுறுசுறுப்பாக இருக்கும், அதே போல தினமும் ஏழு முதல் எட்டு மூடைகள் காலியாகிவிடும் என்கிறார்கள் சிவ்டா வியாபாரிகள். புகழ்பெற்ற இந்த திருவிழாவை காண ஒவ்வொரு ஆண்டும், நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பல மக்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகிறார்கள். இந்த திருவிழா சமயத்தில் லிங்காயத் துறவியான ஸ்ரீ சரண பசவேஸ்வரர் பயன்படுத்திய சில்வர் பிளேட் காட்சிக்கு வைக்கப்படும். மேலும் திருவிழாவின் போது சந்தன மரத்தில் வடிவமைக்கப்பட்ட Linga Sajjike-க்கை பக்தர்கள் தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Food, Karnataka