முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெங்காயத்தில் இப்படியொரு சட்னி வைத்து பாருங்கள்.. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க..!

வெங்காயத்தில் இப்படியொரு சட்னி வைத்து பாருங்கள்.. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க..!

வெங்காய சட்னி

வெங்காய சட்னி

இந்த பதிவில் சின்ன மாற்றமாக சின்ன வெங்காயத்தில் செய்யும் வெங்காய சட்னியை பற்றி தெரிந்து கொள்வோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரும்பாலான வீடுகளில் வெங்காய சட்னி என்றதும் பெரிய வெங்காயத்தில் தான் செய்வர்கள். ஆனால் இந்த பதிவில் சின்ன மாற்றமாக சின்ன வெங்காயத்தில் செய்யும் வெங்காய சட்னியை பற்றி தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 10

காய்ந்த மிளகாய் -4

புளி - சிறிதளவு

உப்பு - தே.அ

கடுகு - 1/2 ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

1. முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் 7 அல்லது 8 காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. பின்பு அதே கடாயில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

3. வதக்கும் போதே சிறிதளவு புளி சேர்த்து அதன் நிறம் மாறும்வரை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. இப்போது மிக்சியில் வறுத்த காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

5. பின்பு அதனுடன் வறுத்து வைத்துள்ள சின்ன வெங்காயம் புளி சேர்த்து சட்னி போல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

6. கடைசியாக எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி இறக்கினால் போதும், சூப்பரான வெங்காய சட்னி ரெடி.

First published:

Tags: Chutney, Onion