முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வீட்டிலேயே கேரளா ஸ்டைலில் சுவையான வாழைப்பழ அப்பம் செய்வது எப்படி?

வீட்டிலேயே கேரளா ஸ்டைலில் சுவையான வாழைப்பழ அப்பம் செய்வது எப்படி?

வாழைப்பழ அப்பம்

வாழைப்பழ அப்பம்

இந்த அப்பம் செய்வதற்கு மொத்தமே 20-25 நிமிடங்கள் தான் ஆகும். இதற்கான மாவு தயாரிக்க பல மணி நேரம் செலவழிக்க வேண்டுமே என நீங்கள் பயப்பட வேண்டாம். சுவையான பண்டம் மட்டுமல்ல உங்களுக்கு சௌரியமானதும் கூட.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வாழைப்பழ அப்பம் ஒரு பாரம்பரிய உணவாகும். இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. இதை செய்வதற்கு 5 பொருட்கள் மட்டுமே முக்கியமாக தேவைப்படும். இந்த அப்பத்தை யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே தயார் செய்யலாம். பணியாரம்/அப்பம் என்பது தென் இந்தியாவில் பிரபலமான சுவை மிகுந்த உணவு. இது இனிப்புச் சுவையோடு இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் வாழைப்பழம் மற்றும் பனை வெல்லம் கலந்து செய்து பாருங்கள்.

சுவையான அப்பம் செய்வதற்கான ரெசிபி இதோ….

வாழைப்பத்தில் சுவையாக ஒரு டெசர்ட் செய்யலாம் என நீங்கள் நினைத்தால், உங்கள் மனதில் எவையெல்லாம் தோன்றும்? வாழைப்பழ பான்கேக், வாழைப்பழ வால்நட் கேக் என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் வாழைப்பழத்தில் இருந்து பாரம்பரிய பலகாரம் செய்யலாம் என்ற சொன்னால் நீங்கள் சற்று தயங்குவீர்கள் தானே. ஆமாங்க, வாழைப்பழத்திலிருந்து சுவையான அப்பம் செய்யலாம் வாங்க!

கேரளாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதாவது திருவிழாவோ அல்லது விருந்து கொண்டாட்டங்களோ என்றால் இந்த அப்பம் தவறாமல் இடம் பிடிக்கும். இது அதிகமான இனிப்புச் சுவை கொண்டிருப்பதால், விசேஷ நாட்களில் தான் இதை ருசிக்க முடியும் என நினைக்க வேண்டாம். வீட்டிலேயே எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த அப்பம் இவ்வுளவு சுவையாக இருப்பதற்கு இதில் சேர்க்கப்படும் குறைவான பொருட்களே காரணம். மேலும் இந்த அப்பம் செய்வதற்கு குறைவான நேரமே ஆகும். இந்த அப்பத்தின் ஆதார சுவையாக வாழைப்பழம் இருந்தாலும், சிறிது தேங்காய் மற்றும் ஏலக்காயின் சுவையையும் நீங்கள் உணரலாம். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பண்டத்தில் சுவைக்காக சர்க்கரையோ, வேறு எதுவுமே நாம் கலக்க வேண்டியதில்லை. சிறிது பனை வெல்லம் சேர்த்தால் போதும். எச்சில் ஊற வைக்கும் சுவை உங்களுக்கு கிடைக்கும். இதை எண்ணெயில் வறுத்து எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அப்பம் அல்லது பணியாரம் செய்வதற்கு உதவும் தவாவை பயன்படுத்தினாலே போதும். தாவாவில் மாவை ஊற்றுவதற்கு முன் கொஞ்சமாக எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொள்ளுங்கள்.

இந்த அப்பம் செய்வதற்கு மொத்தமே 20-25 நிமிடங்கள் தான் ஆகும். இதற்கான மாவு தயாரிக்க பல மணி நேரம் செலவழிக்க வேண்டுமே என நீங்கள் பயப்பட வேண்டாம். சுவையான பண்டம் மட்டுமல்ல உங்களுக்கு சௌரியமானதும் கூட. இன்னும் ஏன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்….இப்போதே சமையலறைக்குச் சென்று அடுப்பை பற்ற வையுங்கள். உங்களுக்கான ரெசிபி இதோ…..

ஒரு பெரிய பாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் பிசைந்து வைத்திருக்கும் வாழைப்பழம், அரிசி மாவு, தேங்காய், பனை வெல்லம், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலக்குங்கள். சுவைக்கு கொஞ்சம் உப்பு, கொஞ்சம் தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். சரியான பதம் வரும் வரை கிண்டி கொண்டே இருங்கள். இப்போது உங்களுக்கு கெட்டியான மாவு கிடைக்கும்.

Also Read | வெயிலுக்கு இந்த ஏலக்காய் சர்பத் போட்டு குடிச்சு பாருங்க... உடல் சூடெல்லாம் தணிந்து போகும்..!

மிதமான தீயில் அப்பம் சுடும் தவாவில், எண்ணெய் சூடானதும் ஸ்பூன் அளவு மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் நிரப்புங்கள். மாவை குழி முழுவதும் நிரப்பி விடாதீர்கள். முகால்வாசி நிரப்பினால் போதும். மேற்புறம் பொன்னிறமாக மாறியதும் அடுத்த பக்கத்தை திருப்பி வேகவையுங்கள். கொஞ்சம் முறுகலாக மாறியதும், தவாவில் இருந்து இறக்கி எண்ணெய் காயும் வரை பேப்பரில் வையுங்கள். இதோ, சூடான சுவையான வாழைப்பழ அப்பம் பரிமாறுவதற்கு ரெடி.

top videos

    ஒருமுறை இந்த வாழைப்பழ அப்பத்தை ருசித்து பார்த்துவிட்டால், இதன் மிருதுவான தன்மைக்கும் அதன் சுவைக்கும் நீங்கள் அடிமையாகி விடுவீர்கள். இதேப்போல் இன்னொரு சுவையான பண்டம் வேண்டுமென்றால் வாழைப்பழ கீர் செய்து பார்க்கலாம்.

    First published:

    Tags: Appam Recipe in Tamil, Recipe