முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்.. இதோ ரெசிபி..!

கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்.. இதோ ரெசிபி..!

மட்டன் ரோஸ்ட்

மட்டன் ரோஸ்ட்

Mutton Recipe | நல்ல காரசாமான கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்-ஐ செஞ்சுருக்கீங்களா? இதை ட்ரை பண்ணி பாருங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மட்டன் சுக்காவைப் போன்றே ருசியாக இருப்பது தான் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட். இதனை விடுமுறை நாட்களில் செய்து பாருங்கள். அப்புறம் இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிதளவு

பொட்டுக்கடலை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு...

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் - 5

மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி - 1 பெரிய துண்டு

பூண்டு - 6 பெரிய பற்கள்

செய்முறை:

மட்டனை நீரில் நன்கு கழுவிக் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சுத்தம் செய்த மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்த மசாலாவை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி வைக்க வேண்டும். 
ஊறிய சிக்கனை குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை அடுப்பில் வேக வைக்க வேண்டும்.
மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் மட்டனை சேர்த்து 10 நிமிடம் நன்கு பிரட்டவும். பிறகு அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் ரெடி.
First published:

Tags: Mutton recipes