முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெயிலுக்கு அசத்தலாக இருக்கும் மோர் குழம்பு.. ..நொடியில் செய்ய ரெசிபி இதோ..

வெயிலுக்கு அசத்தலாக இருக்கும் மோர் குழம்பு.. ..நொடியில் செய்ய ரெசிபி இதோ..

உடல் சூட்டைத் தணிக்கும் மோர் குழம்பு ரெசிபி!

உடல் சூட்டைத் தணிக்கும் மோர் குழம்பு ரெசிபி!

வெறும் 5 நிமிடத்தில் சுவையான மோர் குழம்பு செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

காரம் பிடிக்காத பலருக்கும் பிடித்த குழம்பு மோர் குழம்பு. இதை தயார் செய்ய வெறும் 5 நிமிடம் போதும். காய்கள் ஏதும் சேர்க்காமல் மிகவும் சுலபமான முறையில் செய்யப்படும் இந்த மோர் குழம்பு வெயில்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மோர் குழம்பு எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கெட்டித்தயிர் – 1/2 லிட்டர்.

துவரம் பருப்பு – 2 ஸ்பூன்.

சீரகம் – 1 ஸ்பூன்.

இஞ்சி – சிறிய துண்டு.

பச்சை மிளகாய் – 4.

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் கெட்டித் தயிரை மத்து வைத்து, நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்த தயிரை தண்ணீர் ஊற்றி கரைக்கக் கூடாது.

பின்னர், ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த துவரம் பருப்பு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு கூழ்ம நிலையில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் இதனை நாம் கரைத்து வைத்துள்ள தயிரில் சேர்த்து கலந்துவிட வேண்டும். பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் நன்கு சூடேறியதும், அதில் வெந்தயம், கடுகு, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

Also Read | பச்சை பயிறு தால்... தாபா ஸ்டைல் ரெசிபி.. ட்ரை பண்ணி பாருங்கள்..!

பின்னர் இதனுடன் மஞ்சள் தூள், சின்ன வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கி, அதன்பின்பு நாம் தயாராக வைத்திருக்கும் தயிர் கலவையை இதில் ஊற்றி விட வேண்டும்.

தயிர் கெட்டியான பதத்தில் இருந்தால், இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, நான்கிலிருந்து ஆறு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.

top videos

    மோர்க் குழம்பில் பச்சை வாடை போகும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான மோர் குழம்பு தயார். இதை சுட சுட சாதத்துடன் பரிமாரலாம்.

    First published:

    Tags: Buttermilk, Food, Food recipes