முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளுக்கு பிடித்தமான பீட்ரூட் கட்லெட்.. செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பிடித்தமான பீட்ரூட் கட்லெட்.. செய்வது எப்படி?

மிகவும் குறைந்த நேரத்தில் தயாராகும் ‘பீட்ரூட் கட்லெட்’!

மிகவும் குறைந்த நேரத்தில் தயாராகும் ‘பீட்ரூட் கட்லெட்’!

பீட்ரூட் நம்மில் பலருக்கு பிடிக்காத உணவுகளில் ஒன்று. ஆனால், அதை சாப்பிடும் வகையில் சுவையாக செய்து கொடுத்தால் எப்படி இருக்கும்?.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பீட்ரூட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளை சாப்பிடவைக்க நாங்க உங்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ் கொடுக்க போகிறோம். ஒருமுறை பீட்ரூடை இப்படி சமைத்து கொடுங்க உங்க குழந்தைகள் விரும்பி மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கட்லெட் ஒன்றினை பீட்ரூட், உருளைக்கிழங்கு மற்றும் சில மசாலா பொருட்களை பயன்படுத்தி பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பெரிய சைஸ் பீட்ரூட் - 1.

பெரிய சைஸ் உருளைக்கிழங்கு - 1.

வேர்க்கடலை - 2 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்.

கரம் மசாலா - 1/4 ஸ்பூன்.

கொத்தமல்லி பொடி - 1/2 ஸ்பூன்.

கொத்தமல்லி - ஒரு கொத்து.

நெய் - 2 ஸ்பூன்.

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

கட்லெட் செய்வதற்கு முன்னதாக, முதலில் ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீருடன் உருளை கிழங்கை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அவித்து தனியே எடுத்து வைக்கவும்.

இதனிடையே கட்லெட் செய்ய எடுத்துக்கொண்ட பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடேற்றவும். கடாய் நன்கு சூடேறியதும் இதில் வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து, பின்னர் தோல் நீக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும்.

தற்போது மிக்ஸி ஜார் ஒன்றில் இந்த வேர்க்கடலையினை சேர்த்து கொரகொரவென அரைத்துக்கொள்ளவும். பின்னர் இதனை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

Also Read | வீட்டிலேயே ஈஸியா சிக்கன் சவர்மா செய்யலாம்… இதோ ரெசிபி!

தற்போது இதே மிக்ஸி ஜாரில், அவித்த உருளைக்கிழங்கு மற்றும் நறுக்கிய பீட்ரூட் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும். பின்னர் இந்த சேர்மத்தை வேர்க்கடலை உள்ள பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

தொடர்ந்து இதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி பொடி, உப்பு, நெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பிசைந்துக்கொள்ளவும். இதன் போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பதமாக பிசைந்துக்கொள்ள கட்லெட் மாவு தயார்.

top videos

    தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு கொதிக்கும் நிலையில் கட்லெட் மாவினை, சிறு சிறு அளவில் உருண்டையாக பிடித்து, தட்டையாக தட்டி எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க சுவையான பீட்ரூட் கட்லெட் தயார்.

    First published:

    Tags: Food, Food recipes