முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கம்பு இட்லி.. சர்க்கரை நோயாளிகளுக்கான காலை உணவு ரெசிபி...!

கம்பு இட்லி.. சர்க்கரை நோயாளிகளுக்கான காலை உணவு ரெசிபி...!

கம்பு இட்லி

கம்பு இட்லி

Kambu Idly | உடலுக்கு தெம்பையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும் அற்புத உணவு கம்பு இட்லி.இதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால் இதனை உண்ணும்பொழுது உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் காக்க உதவும். கம்பங்கூழில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. மேலும் இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உங்கள் உடல் எடை குறையும். எனவே உடல் எடையினை குறைக்க விரும்புவார்கள் கம்பு உணவை தினமும் ஒரு வேலை எடுத்துக்கொள்ளலாம். கம்பு இட்லி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

கம்பு

உளுத்தம் பருப்பு

புழுங்கல் அரிசி

உப்பு

செய்முறை:

1. கம்பு, அரிசி, உளுந்து இந்த மூன்றையும் தனித்தனியாக ஊற வையுங்கள்.

2. கம்பை நைஸான ரவை பதத்தில் அரைத்து எடுக்கவும்.

3. உளுத்தம் பருப்பை தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க ஆட்டி, உப்பு சேர்த்து, கம்பு மாவுடன் சேர்த்துக் கலந்து வையுங்கள்.

4. சற்று புளித்ததும், இட்லிப் பானையில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

top videos

    5. இதோ சுடச், சுட கம்பு இட்லி தயார்.

    First published:

    Tags: Breakfast, Food