முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தக்காளி இல்லாத கார சட்னி.. முடிஞ்சா இன்னிக்கே ட்ரை பண்ணி பாருங்க!

தக்காளி இல்லாத கார சட்னி.. முடிஞ்சா இன்னிக்கே ட்ரை பண்ணி பாருங்க!

கார சட்னி

கார சட்னி

தக்காளி இல்லாமல் இதுவரை கார சட்னி செய்திருக்கிறீர்களா.? சுவையான இந்த சூப்பர் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..

 • Last Updated :
 • Tamil Nadu, India

பொதுவாகவே கார சட்னி என்றால் அது சிவப்பாக இருக்கும். வெங்காயம், தக்காளி சேர்க்கப்படும். இப்படி தான் சென்னை போன்ற நகரங்களில் உள்ள  வீட்டிலும் சரி, ஹோட்டல்களிலும் சரி சட்னி பரிமாறப்படும். இதை கார சட்னி, ரெட் சட்னி, தக்காளி -வெங்காய கார சட்னி என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் தக்காளி சேர்க்காமல், பச்சை நிறத்தில் இருக்கும் கார சட்னியை இதுவரை டேஸ்ட் செய்து இருக்கீங்களா? அச்சு அசல் கார சட்னி சுவையில் தான் இருக்கும். ஆனால் பார்த்தால் அந்த ரெட் கலர் இருக்காது. இதற்கு பெயர் தான் தக்காளி இல்லாத கார சட்னி. இது மதுரையில் ரொம்ப ஃபேமஸ்.

அந்த சட்னியை எப்படி செய்வது என்பது பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். முடிஞ்சா இன்னிக்கு நைட் டின்னருக்கு இந்த சட்னியை ட்ரை பண்ணி பாருங்கள். இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சட்னி ரெசிபி யூடியூப்பில் இருக்கும் ’டுடேஸ் சமையல்’ என்ற குக்கிங் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

 • சின்ன வெங்காயம்
 • காய்ந்த மிளகாய்
 • கொத்தமல்லி
 • கடுகு
 • உளுந்து
 • கடலை பருப்பு
 • எண்ணெய்
 • உப்பு
 • கறிவேப்பிலை
 • பெருங்காயம்.

செய்முறை:

1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.

2. பின்பு அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

3. வாசனைக்கு சிறிதளவு பெருங்காய சேர்க்க வேண்டும்.

' isDesktop="true" id="982579" youtubeid="IRBFyZ4X7VU" category="food">

4. இவற்றை நன்கு வதக்கிய பின்பு தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி சேர்த்து கலவையை ஆற வைக்க வேண்டும்.

5. இறுதியாக இந்த கலவையை மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும்.

top videos

  6. தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்தும் அரைத்து எடுக்கலாம். அவ்வளவு தான். இப்போது ஈஸியான தக்களி சேர்க்காத மதுரை கார சட்னி தயார்.

  First published:

  Tags: Chutney, Chutney Recipe in Tamil