முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இட்லி மாவு உடனே புளிக்கணுமா? இதை செய்யுங்க போதும்..!

இட்லி மாவு உடனே புளிக்கணுமா? இதை செய்யுங்க போதும்..!

இட்லி மாவு

இட்லி மாவு

idly Mavu | பொதுவாகவே சில வீடுகளில் 8 மணி நேரம் இட்லி மாவை வைத்தால் கூட சரியாக புளித்து பொங்கி வராது. இதற்கு காரணம் உளுந்தும் அரிசியும் சரியான விகிதத்தில் கலக்கப்படாமல் இருப்பது தான்.

  • Last Updated :

புதுசா அரைத்த இட்லி மாவை அரை மணி நேரத்தில் புளிக்க வைத்து இட்லி சுடலாம். இதில் தோசையும் சுடலாம். அதற்கு சில குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

1.மாவு அரைத்தவுடன் அவனில் வைப்பது சீக்கிரம் புளிக்க உதவும். ஒரு முறை மாவு புளித்தவுடன, அடுத்த முறை புதிதாக மாவு அரைக்கும் போது பழைய புளித்த மாவை சிறிது ஊற்றி கலக்கி வைத்தால் காலையில் நன்கு புளித்துவிடும்.

2.இட்லி மாவை வழக்கம்போல அரைத்து விட்டு உப்பு போட்டு உங்களுடைய கையை வைத்து நன்றாக கரைக்க வேண்டும். கை சூட்டில்தான் இட்லி மாவு புளிக்கும்.

3.தற்போது தேவையான மாவை மட்டும் ஒரு கின்னத்தில் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள மாவை புளிப்பதற்கு முன்பு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து விட்டால் நீண்ட நாட்களுக்கு புளிக்காமல் அப்படியே இருக்கும்.

4. இப்போது அரைத்த புதிய இட்லி மாவை அரைமணி நேரத்தில் புளிக்க வைக்க மூன்று வழிகள் உள்ளது. முதலாவது வழி. அரைத்த இந்த மாவின் மேல் ஒரு தட்டு போட்டு மூடி அடிக்கின்ற வெயிலில் அரை மணி நேரம் வைத்தால் சிறிய சிறிய மாவு புளிக்க தொடங்கி விடும்.

5. ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த குக்கரை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்ய வேண்டும். அதாவது குக்கரில் இருந்து புகை வரும் அளவிற்கு சூடு செய்துவிட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த குக்கருக்கு உள்ளே மாவு பாத்திரத்தை வைத்து, குக்கருக்கு மேலே மூடி போட்டு விசிலும் போட வேண்டும். உள்ளே இருக்கும் காற்று வெளியில் போகாமல் இருக்கத்தான் விசில். ஞாபகமாக அடுப்பை அணைத்துவிட்டு இந்த குறிப்பை பின்பற்றி வேண்டும்.

6. அரைத்த மாவுக்கு மேலே வரமிளகாயை காம்புகளோடு போட வேண்டும். காம்புகள் மாவில் படும்படி இரண்டு அல்லது மூன்று மிளகாய்களை மாவுக்கு மேலே வைத்து மூடி போட்டு விட்டால் மாவு 1 மணி நேரத்தில் நன்றாக புளித்து பொங்கி வரும்.

7. ஒரு அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீரை ஊற்றி அந்த சுடுதண்ணீரின் மேல் மாவு கிண்ணத்தை வைத்தால் 1 மணி நேரத்தில் மாவு ஓரளவுக்கு புளித்து பொங்கி வரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

top videos

    8. பொதுவாகவே சில வீடுகளில் 8 மணி நேரம் இட்லி மாவை வைத்தால் கூட சரியாக புளித்து பொங்கி வராது. இதற்கு காரணம் உளுந்தும் அரிசியும் சரியான விகிதத்தில் கலக்கப்படாமல் இருப்பது தான்.

    First published:

    Tags: Food, Tips