முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சூப்பர் ஸ்வீட்.. பலாப்பழ பாயாசம் செய்ய ரெசிபி இதோ..!

சூப்பர் ஸ்வீட்.. பலாப்பழ பாயாசம் செய்ய ரெசிபி இதோ..!

பலாப்பழ பாயாசம்

பலாப்பழ பாயாசம்

Jackfruit Payasam | கேரளாவில் பலாப்பழ பாயாசம் மிகவும் பிரபலம். நாம் இதை எப்படி எளிய முறையில் செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்..

  • Last Updated :
  • Tamil Nadu, India

விருந்தில் அனைவராலும் விரும்பி சாப்பிடும் உணவுதான் பாயாசம். தமிழகத்தில் விருந்தில் தவறாது இடம் பெறும் பாயாசத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவார்கள். அத்தகைய பாயாசத்தை பலாப்பழம் கொண்டு செய்தால் ருசி சூப்பராக இருக்கும். எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பலா சுளை - 20

தேங்காய் பால் - 2 கப்

வெல்லம் - 150 கிராம்

ஏலக்காய் - 6 (பொடி செய்தது)

முந்திரி - தேவையான அளவு

பிஸ்தா - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

செய்முறை :

1. முதலில் பலா சுளையில் இருந்து கொட்டைகளை நீக்கி விட்டு தனியாக வைக்கவும். பின்னர் சுளையை பொடியாக நறுக்கி வைக்கவும்.

2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பலா சுளையை வேக வைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு நன்றாக கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை வறுத்து வைக்கவும்.

3. பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்த பலாப்பழ விழுதை போட்டு அதன்பின் ஏலத்தூள், தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி கொதிக்க விடவும்.

Also see... சுவையான பலாக்காய் குழம்பு செய்ய ரெசிபி...

top videos

    4. பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான இனிப்பான பலாப்பழம் பாயாசம் ரெடி.

    First published:

    Tags: Jack Fruit, Payasam